மாவட்ட அவைத்தலைவர் சரவணன்  தலைமை வகித்தார்.மாநகர் மாவட்ட செயலாளர்  பாப்புலர் V.முத்தையா அவர்கள் ,பொருளாளர் மகபூப்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற செய்வது,அடுத்த மாதம் அம்மா அவர்கள் தலைமையில் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு நெல்லை மாநகர் மாவட்ட MGR இளைஞரணி சார்பில் 25 வேன்களில் செல்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பகுதிசெயலாளர்கள்,மாதவன்,காமராஜ்,ஈஸ்வரகணபதி,மோகன்,முருகன்,மாவட்ட இளைஞரணி செயலாளர் மனிமாளிகை கனேஷ்,பொருளாளர் அசன் ஜாபர் அலி,வக்கீல் மணிகண்டன் ,சண்முகவேல் பாண்டியன்,ரோகினி,பாண்டி,சுப்பையா,சீனிவாசன்,சண்முககுமார்,பாலமுருகன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை MGR இளைஞரணியினர் செய்திருந்தனர்.


Nellai City AIADMK   
.

நெல்லை டவுனில் அதிமுக பொதுக்கூட்டம்.05.09.2010
நெல்லை டவுன் வாகையடி முக்கில்  மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.முன்னால் பகுதி செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார்.மாநகர் மாவட்ட MGR மன்ற செயலாளர் கணேசராஜா வரவேற்றார்.கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நெத்தியடி நாகையன்,மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.மாநகர் மாவட்ட துணை செயலாளர் பழனி,நெல்லை தொகுதி செயலாளர் பள்ளிக்கோட்டை அ.செல்லதுரை,மாநகர் மாவட்ட MGR இளைஞர் அணி செயலாளர் மணிமாளிகை கணேஷ்,மாநகர் மாவட்ட இளைஞர்,இளம்பெண்கள் பாசறை செயலாளர் சிவா@பரமசிவன் மற்றும் கழக நிர்வாகிகள்,,பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.


.nellai city AIADMK
நெல்லையில் வ.உ.சி பிறந்தநாள்  நெல்லை மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் M.G.R மன்ற மாநில செயலாளர் P.H பாண்டியன் தலைமையில் மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா,இளைஞர் பாசறை மாநில நிர்வாகி சரவணப்பெருமாள்,முன்னாள் M.P முருகேசன்,மாவட்ட பொருளாளர் மகபூப்ஜான், வக்கீல் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
.

அதிமுக இளைஞர் பாசறைக்கு புதுவடிவில் அடையாள அட்டைநெல்லை மாநகரில் 11 ஆயிரம் பேருக்கு வினியோகம்.அதிமுக வில் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் கடந்த 2008 ம் ஆண்டு இளைஞர் இளம்பெண்கள் பாசறை உருவாக்கப்பட்டது அனைத்து மாவட்டங்களிலும் வார்டு வாரியாக உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப் பட்டது.பாசறையில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு முதலில் ஒரு இளைஞரும் இளம்பெண்ணும் அதிமுக கொடியை பிடித்திருப்பது போன்ற வடிவில் உறுப்பினர் அட்டை அச்சிட்டு வழங்கப்பட்டது.அட்டையின் பின்பக்கத்தில் உறுப்பினரின் பெயர் மற்றும் இதர விவரங்களை கையால் எழுதி வழங்கினர்.இந் நிலையில் புதிய வடிவத்தில் பாசறை உறுப்பினர் அடையாள அட்டை அச்சிட்டு தலைமை கழகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.அட்டையின் பி புறத்தில் உறுப்பினர் விவரங்கள் கம்ப்யூட்டர் மூலம் அச்சிடப்பட்டுள்ளது.நெல்லை மாநகரில் 55 வார்டுகளில் பாசறை உறுப்பினர்களாக உள்ள 5 ஆயிரத்து 859 இளம்பெண்கள்,5 ஆயிரத்து 76 இளைஞர்கள் உட்பட  மொத்தம் 10 ஆயிரத்து 935 பேருக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக பாசறை மாவட்ட செயலாளர் திரு.பரமசிவன் தெரிவித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் உடன் இருந்தார்கள்.

.

அண்ணா தொழிற்சங்க ஆலோசனை கூட்டம். எதிர்க்கட்சிகள் பந்த் குறித்து ஆலோசனை கூட்டம். மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பொன்னுசாமி அவர்கள் தலைமையில் நடந்தது.இதில் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பாப்புலர் V.முத்தையா,பொருளாளர் மகபூப்ஜான்,துணை செயலாளர் பழனி மற்றும் கிருஷ்ணமூர்த்தி,முருகன்,கண்ணன்,வேலாயுதம்,சிவா,கோவிந்தராஜ்,
அய்யப்பன்,குமரன்,மதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த சுப்பையா மற்றும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களை சேர்ந்த காசிவிஸ்வநாதன்,கருமலையான்,ஆறுமுகம்,நாதன்,மோகன்,சுப்பையா,
 உச்சிமாகாலி உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

.

நெல்லை சட்டசபை தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் ஸ்.முருகேசன் அவர்கள் தலைமையில் நடந்தது.பொருளாளர் மகபூப்ஜான்,துணைசெயலாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் :ஜுலை 14 ம் தேதி வரை நடக்கும் வாக்காளர்கள் சேர்ப்பு சிறப்பு முகாமின்போது கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் பகுதியில் உள்ள 18 வயது நிரப்பிய புதிய வாக்காளர்கள்,விடுபட்ட வாக்காளர்கள் பெயர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.வரும் 10,11 ம் தேதிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களில் அதிமுக சார்பில் ஒரு முகவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் தொகுதி இணைசெயலாளர்கள் பால் கண்ணன்,பரமசிவன்,மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளார் வக்கீல் B.மணிகண்டன்,கங்கை முருகன்,பழவூர் வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நெல்லை சட்டசபை தொகுதி செயலாளர் பல்லிக்கோட்டை செல்லதுரை அவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

.

 நெல்லையில் அதிமுக ஆலோசனை கூட்டம்.அம்மா அவர்கள் ஆணைக்கினங்க  05.07.2010 அன்று நடக்கவிருக்கும் பந்த் தொடர்பான அதிமுக ஆலோசனை கூட்டம் நெல்லை மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திக்கு மாநகர் மாவட்ட தலைவர் முருகேசன் அவர்கள் தலைமை வகித்தார்.மாநில M.G.R  இளைஞர் அணி துணை செயலாளர் S.சரவணபெருமாள் அவர்கள்,மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்கள்,துணை தலைவர் பழனி,பொருளாளர் மகபூப்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாதவன்,கயாத,மோகன்,கணேஷ்,ஜெரால்ட்,திருமலையப்பன்,
ஷாஜகான்,நவ்ஷாத்,கதிரவன்,முருகன்,வேலாயுதம்,சாகுலமீது,
நசாக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

.

நெல்லை மாநகர் மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 11.06.2010 அன்று மாநில செயலாளர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் தலைமை யில் நடந்தது.மாவட்ட மாணவரணி செயலாளர் ஜெரால்டு வரவேற்றார்.மாநில துணை செயலாளர் சோலைகண்ணன்,மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா,பொருளாளர் மகபூப்ஜான்,துணை செயலாளர் பழனி,முன்னாள் MP முருகேசன்,மாணவரணி துணை செயலாளர் கராத்தே ஸ்டீபன்,பகுதி மாணவரணி செயலாளர் கணேசன்,காதர்,ஜான்சன்,துர்கா,பேட்டை ரமேஷ்,வக்கீல் மணிகண்டன்,டால் சரவணன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.புதிய நிர்வாகிகள் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.கூட்டத்தில் நெல்லை சந்திப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மாணவரணி  ஆலோசனை கூட்டம் தொடர்பான டிஜிட்டல் பேனரை அகற்றிய போலீசாருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.மேலும் இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று மனு அளித்தனர் பேனரை அகற்றிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவரணி மாநில செயலாளர் கேட்டுக்கொண்டார்.

.

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்க்காக மனோஜ் பாண்டியன் அவர்கள் உட்பட அதிமுக வேட்பாளர்கள் சென்னையில் மனுதாக்கல் செய்தனர்.நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்கள்,பொருளாளர் மகபூப்ஜான்,அண்ணா தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட ஜெ.பேரவை இணைச்செயலாளர் சின்னத்துரை,மேலப்பாளையம் பகுதி செயலாளர் கயாத்,மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் வக்கீல் மணிகண்டன்,பாளை அசன் ஜாபர் அலி உட்பட நெல்லை அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.மனோஜ் பாண்டியன்,K.V ராமலிங்கம் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.


.

நெல்லை டவுண் வாகையடி முனையில் 05.06.2010 அன்று இரவு 7 மணியளவில் கழக பேச்சாளர் திரு நடிகர் குண்டு கல்யாணம் மற்றும் மாநில M.G.R இளைஞர் அணி துணை செயலாளர் திரு.S.சரவணப்பெருமாள்,மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்  பொதுமக்கள்,கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்...

நெல்லை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பொருளாளராக எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்களை மாண்புமிகு தங்கத்தாரகை புரட்சித்தலைவி என்றும் எங்கள் முதல்வர் அம்மா அவர்களுக்கும்,பரிந்துரை செய்த தொண்டர்களின் பாதுகாவலர் மாநகர் மாவட்ட செயலாளர்
பாப்புலர் V முத்தையா அவர்களுக்கும் எஸ்.கிருஷ்ணமூர்த்தி நன்றி  தெரிவித்துள்ளார்.

.

.

SSLC தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்த நெல்லை மாணவி சமீரா ஜாஸ்மினை பாராட்டி ரொக்கப்பரிசு மற்றும் கேடயத்தை மாவட்ட மாநகர் அதிமுக செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்கள் வழங்கினார்கள் அருகில் மகபூப்ஜான்,பழனி,ராஜா,அசன் ஜாபர் அலி,பள்ளிக்கோட்டை செல்லதுரை மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.நெல்லை மாணவி சமீரா ஜாஸ்மினை பாராட்டி ரொக்கப்பரிசு மற்றும் கேடயத்தை மாவட்ட மாநகர் அதிமுக செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்கள் வழங்கினார்கள் அருகில் மகபூப்ஜான்,பழனி,ராஜா,அசன் ஜாபர் அலி,பள்ளிக்கோட்டை செல்லதுரை மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

.


பாளை ஜவகர் திடலில் அதிமுக பொதுக்கூட்டம் 29.05.2010 அன்று இரவு 7 மணியளவில் நடந்தது.கூட்டத்திற்க்கு 22 வது வட்ட செயலாளர் அசன் ஜாபர் அலி தலைமை வகித்தார் பரமன்,வக்கீல் சிவா ,விஜிலாசத்தியானந் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பாளை பகுதி துணை செயலாளர் அப்ரின் பீர்முகமது வரவேற்றார் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர் M.P பாண்டியன்,மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா சிறப்புரை ஆற்றினார்கள் முன்னால் கவுன்சிலர் M.C ராஜன்,வக்கீல் அருணகிரி,தளவாய்,முருகன்,தங்கப்பிச்சை மற்றும் பொதுமக்கள்,கழக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.சப்பாணி முத்து நன்றி கூறினார்.ஏற்ப்பாடுகளை 18 வது வார்டு முருகன் செய்திருந்தார்.

.

நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்
நடிகர் திரு.ஆணந்தராஜ் அவர்களுடன் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V. முத்தையா அவர்கள்.


.

அம்மா அவர்களின் வேன்டுகோளுக்கு இனங்க பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் 106வது பிறந்தநாள் நிகழ்ச்சி நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில் கொக்கிரகுளம் ரோஸ் மகாலில் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் திரு.தேவகவுடா உடண் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள்.


.

பாளையில் அதிமுக மகளிரனி நிர்வாகிகள் கூட்டம்.நெல்லை மாநகராட்சியில் 55 வட்ட ங்களுக்கும் அதிமுக மகளிரணி நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நெல்லையில் நடந்தது மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயராணி தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்கள்,அவைத் தலைவர் முருகேசன் அவர்கள் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மாநில மகளிரணி செயலாளர் கோகுல இந்திரா பேசுகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிரணி நிர்வாகிகளை நேரில் சந்தித்து பொறுப்புகளை ஒப்படைக்குமாறு அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார் பெண்களுக்கு தற்ப்போது 33 சதவீதம் இடஒதுக்கிடு வழங்கப்பட்டுள்ளது எனவே அரசியலில் பெண்கள் எழுச்சியுடன் பங்கேற்க வேண்டும் என்றார் நெல்லை மநகராட்சியின் 55 வட்ட பொருப்பாளர்களுக்கும் தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகள்,பொதுக் கூட்டங்களில் பங்கேற்க்க வேண்டும் கூட்டத்தில் பாளை காமராஜ்,சரவணன்,,பகுதி மகளிரணி செயலாளர்கள் தச்சை மும்தாஜ்,எமிலி,பாலை பூங்கோதை,நெல்லை அக்தர் பானு,பொதுக்குழு உறுப்பினர்கள் விஜிலா சத்யானந்த்,தச்சை தழிழ்ச்செல்வி,இளைஞர் பாசறை மாவட்டச் செயலாளர் பரமசிவன்,இளம்பெண்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

.நெல்லை டவுனில் அதிமுக சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடந்தது அண்ணா தொழிற்சங்க மாநகர் மாவட்ட இணை செயலாளர் பொன்னுசாமி தலைமை வகித்தார் தலைவர் சின்னதம்பி,பொருளாளர் அன்பழகன்,இணை செயலாளர் பகவதி முருகன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் பி.எச்.பாண்டியன் பேசுகையில் பாகிஸ்தான்,சீனாவிலிருந்து ஏராளமான கள்ள நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு நமது நாட்டில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது.இதனால் நமது நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.எனவே கள்ள நோட்டு கும்பல் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் ஜஸ்டின் செல்வராஜ்,தலைமை பேச்சாளர் அபுபக்கர்,மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவைத்தலைவர் முருகேசன் பொருளாளர் மகபூப்ஜான்,பழனி,பகுதி செயளாளர்கள் மோகன்,மாதவன்,ஹயாத்,மானூர் வேலாயுதம்,பிற அணி செயளாளர்கள் சுதா பரமசிவம்,சினனதுரை.கணேஷ்,ஜெரால்ட்,பாசரை பரமசிவன்,பரணி சங்கரலிங்கம்,அசன் ஜாபர் அலி,ராமகிருஷ்ணன்,அர்சுனன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.ஏற்பாடுகளை நெல்லை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தினர் செய்திருந்தனர்.

.


பாளை ஜவகர் மைதானத்தில் 23.04.2010 அன்று இரவு 7 மணிக்கு பாளை பகுதி செயலாளர் காமராஜ் தலைமை வகித்தார்.மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம்,மாநில சட்டத்துறை துணை செயலாளர் அரசு அமல்ராஜ் சிபிஜ[M]மாவட்ட செயலாளர் பழனி,சிபிஜ மாவட்ட செயலாளர் சண்முகவேல்,சிபிஜ[M]மாநகர செயலாளர் தியாகராஜன்,பார்வர்டுபிளாக் மாவட்ட பொது செயலாளர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கணேசராஜா,பரணி சங்கரலிங்கம்,ஆகியோர் வரவேற்றனர்.இலக்கிய அணி துணை செயலாளர் சக்திகோதாண்டம்,மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்கள் ஏப்.27 ம் தேதி நடைபெறும் கடையடைப்பு போராட்ட விளக்க மாக உரையாற்றினார்.மாவட்ட துணை செயலாளர் பழனி,பொருளாளர் மகபூப்ஜான்,பகுதி செயலாளர் மாதவன்,பிற அணி செயலாளர்கள் சுதாபரமசிவன்,ஜெரால்ட்,வி.டி திருமலையப்பன்,பொதுக்குழு உறுப்பினர் விஜிலா,செந்தில் ஆறுமுகம் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆயிரம் செல்வகுமார்,பாளை பகுதி துணை செயலாளர் அப்ரின் பீர்முகமது,வட்ட செயலாளர் அசன் ஜாபர் அலி,சப்பாணிமுத்து டால் சரவனன் உட்பட கழக நிவாகிகள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் கண்மணி நன்றி கூறினார்.


.

அம்மா அவர்களின் ஆணைக்கினங்க நெல்லை டவுனில் அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு நெல்லை டவுன் குற்றாலம் ரோட்டில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது மாநகர் மாவட்ட பொருளாளர் மகபூப்ஜான் தலைமை வகித்தார்.மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் மணிமாளிகை கணேஷ்,வட்ட பாக செயலாளர் சாத்தை நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அண்ணா நகை தொழிலாளர் சங்க செயலாளர் அய்யப்பன் வரவேற்றார்.மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார் இதில் பகுதி செயலாளர் மோகன்,பொதுக்குழு உறுப்பினர் சங்கர்,வக்கீல் மணிகண்டன்,வட்ட செயலாளர்கள் அப்துல் சமது,வரதராஜன்,அண்ணா தொழிற்சங்க தலைவர் உமர்,பொருளாளர் சுப்பிரமணியன்,இலக்கிய அணி செயலாளர் நவ்ஷாத்,மாநில பேச்சாளர்கள் கபாலி,காந்திமதிநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

.

நெல்லை டவுனில் அதிமுக பொதுக்கூட்டம் பகுதி செயலாளர் மோகன் தலைமையில் 22.04.2010 அன்று இரவு நடைப்பெற்றது.மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம்,மார்க்சியூஸ்ட் மாவட்ட செயலாளர் பழனி,இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில ஜெ பேரவை செயலாளர் திரு.நயினார் நாகேந்திரன் சிறப்புரை ஆற்றினார்கள்.தலைமை பேச்சாளர் கிருபாகரன்,மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா ,மாவட்ட அவைத்தலைவர் திரு.முருகேசன்,மாவட்ட நிர்வாகிகள் பழனி,மகபூப்ஜான்,பகுதி செயலாளர்கள் சுதாபரமசிவன்,ஜெரால்ட்,பரணி ச்ங்கரலிங்கம்,மாவட்ட ஜெ பேரவை இனை செயலாளர் செந்தில் ஆறுமுகம்,பாளை பகுதி ஜெ பேரவை செயலாளர் எம்.சி.ராஜன்,பாளை பகுதி துணை செயலாளர் அப்ரின் பீர்முகமது,வட்ட செயலாளர் ஜாபர் அலி,பிரகாஷ்,சரவனன்,செல்லதுரை,உட்பட பலர் கலந்து கொண்டனர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.

.

நெல்லையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டதில் திமுக - அதிமுகவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.இதையடுத்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.நெல்லை மாநகரை அழகுபடுத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் வண்ணார்பேட்டையில் [20.04.2010 ]நேற்று நடந்தது மாநகர் துணை போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் தலைமை வகித்தார்.நெல்லை ஆர்.டி.ஒ தமிழ்செல்வி,உதவி போலீஸ் கமிஷனர்கள் மகேந்திரன்,ராமச்சந்திரன்,மாநகராட்சி பாளை மண்டல உதவி கமிஷனர் பாஸ்கர் மற்றும் திமுக செயலாளர்கள் உலகநாதன்,சாகுல் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா,மேலப்பாளையம் பகுதி செயலாளர் ஹயாத் மற்றும் அணைத்துக்கட்சியினர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் அவினாஷ்குமார் பேசுகையில் நெல்லை மாநகரை அழகு படுத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக விளப்பரபோர்டுகள் வைக்க கூடாது போலீஸ் அனுமதியின்றி விளப்பரங்கள்,போஸ்டர்கள் ஒட்டக்கூடாது இதற்க்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.அப்போது மாவட்ட அதிமுக செயலாளர் பாப்புலர் V.முத்தையா தண்ணீர் பந்தல் வைப்பதற்க்கு கூட எதிர்க்கட்சியினருக்கு அனுமதி மறுக்கப் படுகிறது என்றார் மேலப்பாளையம் பகுதி திமுக செயலாளர் சாகுல் ஹமீது ஆளும் கட்சியினரும் முன் அனுமதி பெற்றுதான் விளம்பரம் போர்டுகள்,தண்ணீர் பந்தல்கள் அமைக்கின்றனர் என்றார்.இதற்கு அதிமுகவினர் அனுமதி பெற்றதை நிரூபிக்க முடியுமா?என்று கேட்டனர்.இது தொடர்பாக திமுக-அதிமுகவினரிடையெ கடும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது போலீசார் அவர்களை சமாதானப் படுத்தினர்.மேலும் போஸ்டர்கள்,பேனர்கள் வைக்க கூடாது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது இதற்கென கலெக்டர் தலைமையில் போக்குவரத்து கமிட்டி இருக்கிறது அந்த கமிட்டி தான் முடிவு செய்ய வேண்டும் என அனைத்துக் கட்சியினரும் கருத்து தெரிவித்தனர் எனவே முடிவு எதுவும் எடுக்கப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.வரும் 30ம் தேதி மீண்டும் இந்தக் கூட்டம் நடைபெறும் என துணை போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் தெரிவித்தார்.

.

பாளை 23வது வார்டில் அம்மா அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக கொடியேற்று விழா மற்றும் அம்மா அவர்கள் ஆணைப்படி தண்ணீர் பந்தல் திறப்புவிழா 19.04.2010 அன்று நடந்தது.வார்டு அவைத்தலைவர் ஆனந்தநம்பி தலைமை வகுத்தார் மாநகர் மாவட்ட பேரவை இணை செயலாளர் செந்தில் ஆறுமுகம் முன்னாள் கவுன்சிலர் கருடன் ராஜகோபால்,பகுதி பேரவை செயலாளர் ராஜன்,பாளை சட்ட மன்ற செயலாளர் ஆதித்தன்,மாவட்ட துணை செயலாளர் பழனி முன்னிலை வகித்தனர்.பகுதி துணை செயலாளர் அப்ரின் பீர்முகமது வரவேற்றார்.மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்கள் கோடைக்காலத்தை முன்னிட்டு கட்சி சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்கள்.முன்னாள் மாவட்ட மன்ற செயலாளர் சங்கரன்,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் வக்கீல் சிவா 14வது வட்ட செயலாளர் சப்பாணி முத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் மாரிமுத்து நன்றி கூறினார்.ஏற்பாடுகளை வார்டு வட்ட செயலாளர் மைதின் கம்பர்,இணை செயலாளர் பொன்ராஜ்,பொருளாளர் சந்திரசேகர்,மேலமைப்பு பிரதிநிதிகள் கணேசன்,பாரதி,முத்துகுமார் செய்திருந்தனர்.

.

ஜெயலலிதா அவர்கள் பிறந்தநாளையொட்டி நெல்லை உடையார்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது.மாநகர் மாவட்ட துணை செயலாளர் பழனி தலைமை வகித்தார் வட்ட செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார்.மாநகர் மாவட்ட செயலாலர் திரு.பாப்புலர் V முத்தையா,பொருளாளர் மகபூப்ஜான்,எம்ஜிஆர் மன்ற செயலாளர் தச்சை கணேஷ் ராஜா,பகுதி தலைவர் பொன்னுத்துரை,பொதுக்குழு உறுப்பினர்கள் சங்கர்,விஜிலா சத்யானந்த்,ஈஸ்வரகணபதி,இளைஞர் பாசறை செயலாளர் பரமசிவன்@சிவா,மணிகண்டன்,சின்னதுரை மற்றும் சந்திரசேகர்,ரவி ஆறுமுகம்,கண்டியபேரி முத்து,பழனி,சங்கர்,மாரி,வெள்ளப்பாண்டியன்,வேலு,வேல்முருகன்,பொன் தங்கராஜ்,ஈஸ்வரன்,முருகன்,பால்ராஜ்,சுப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர் இசக்கிமுத்து நன்றி கூறினார் கூட்டத்தில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

.


நெல்லை டவுனில் மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் முதல் தொடர் தெருமுனை பொதுக்கூட்டம் 11.04.2010 அன்று 7மணிக்கு நடந்தது.மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் மணிமாளிகை கணேஷ் தலைமைவகித்தார்.இந்திரா,மணிகண்டன்,சரவணன்,சுப்பையா,கபாலி,காந்திமதிநாதன்,உலகநாதன்,சண்முகவேல் பாண்டியன் முன்னிலை வகித்தனர்.நெல்லை பகுதி செயலாளர் மோகன்,முன்னால் செயலாளர் ச்ந்திரசேகர்,பகுதிசெயலாளர் ஈஸ்வரகணபதி வரவேற்றனர்.அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் பழனி,மகபூப்ஜான்,விஜிலா சத்தியானந்த்,வேலாயுதம்,முருகன்,இலக்கிய அணி நவ்சாத்,டால் சரவனன் ,பாலு,அண்ணாமலை,பக்கீர் முகம்மது,உட்பட பலர் கலந்து கொண்டனர் எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர்கள் சீனிவாசன்,சண்முககுமார் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

.


நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஊராட்சி மற்றும் வட்ட பாக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு கோடகநல்லூர் செல்லப்பா என்ற பெருமாள் தலைமை வகித்தார் மாநகர் மாவட்ட பொருளாளர் மகபூப்ஜான்,மானூர் தெற்கு ஒன்றிய செயளாளர் வேலாயுதம்,வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனரதில் மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்கள் ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்,மற்றும் இலக்கிய அணி செயலாளர் நவ்ஷாத்,இளைஞர் பாசறை செயலாளர் பரமசிவன் என்ற சிவா ,மூக்காண்டி,வக்கீல் மணிகண்டன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு 03.03.2010 அன்று நெல்லை டவுனில் நல உதவிகள் வழங்கப்பட்டன.டவுன் குற்றாலம் ரோட்டில் உள்ள டி டி டி ஏ உயர் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V முத்தையா அவர்கள் இலவச நோட்டு,புத்தகங்கள் வழங்கினார் இதில் மாவட்ட MGR இளைஞர் அணி செயலாளர் மணிமாளிகை கணேஷ்,சாத்தை நாராயணன்,பகுதி முன்னால் செயலாளர் சந்திரசேகர்,அண்ணா நகை தொழிலாளர் சங்க செயலாளர் ஐயப்பன்,வக்கீல் மணிகண்டன்,சுப்பிரமணியன்,சுடலையான்டி,ஆகியோர் கலந்துகொண்டனர்.விழா ஏற்பாட்டை சுப்புரமணியன்,சுடலையான்டி ஆகியோர் செய்தனர்.


கழகமே கோவில் அம்மாவே தெய்வம் 27.02.2010 அன்று மாலை 7 மணி அளவில் பாளை ஜவகர் திடலில் அதிமுக பொதுக்கூட்டம் பகுதி செயலாளர் காமராஜ் தலைமை வகித்தார் தங்கமணி,அப்ரின் பீர் முகமது,விவேகானந்த பாண்டியன்,அப்துல் வகாப் முன்னிலை வகித்தனர் மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர் பரனி சங்கரலிங்கம் வரவேற்றார்.மாநில M.G.R இளைஞரனி துணை செயலாளர் S சரவணபெருமாள் அவர்கள்,மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V முத்தையா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் தலைவர் முருகேசன்,துணை செயலாளர் பழனி,பொருளாளர் மகபூப்ஜான்,முன்னால் அமைப்பு செயலாளர் முத்துக்கருப்பன்,சட்ட மன்ற தொகுதி செயலாளர் ஆர்.பி ஆதித்தன்,பகுதி செயலாளர்கள் மோகன்,மாதவன்,மாவட்ட MGR செயலாளர் கணேஷ்ராஜா,ஜெ.பேரவை செயலாளர் சுதா பரமசிவன் MGR இளைஞர் அணி செயலாளர் கணேஷ்,பகுதி செயலாளர் ஈஸ்வரகணபதி,பாளை ஒன்றிய செயலாளர் ராமசுப்பிரமணியன்,செல்வகுமார்,பரமசிவம்,சப்பாணிமுத்து மற்றும் தொண்டர்கள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் நாகேந்திரன் நன்றி கூறினார்கள்.

.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் பிறந்தநாளான 24.02.2010 அன்று அதிகாலை 12 மணிக்கு நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V முத்தையா அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.சாலைக்குமார சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு 62 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது.62 பேர் பால்குடம் எடுத்து பாப்புலர் V முத்தையா அவர்கள் தலைமையில் ஊர்வலமாக வந்தனர்.ஏற்பாடுகளை மாவட்ட மகளிர் அணி துணைச்செயலாளர் புவனேஸ்வரி செய்திருந்தார் தொடர்ந்து பாளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு இலவச தொட்டில்,படுக்கை வழங்கப்பட்டன.பிஷப் சார்ஜென்ட் பள்ளியில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.அதை தொடர்ந்து பாளை பகுதியில் ரத்ததான முகாம் ஆர்.பி.ஆதித்தன்,நெல்லை தொகுதி பொருப்பாளர் பள்ளிக்கோட்டை செல்லத்துரை தலைமையில் நடந்தது.பாளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று பிறந்த 15 குழந்தைகளுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்கள் தலைமையில் மாநில M.G.R இளைஞரணி செயலாளர் சரவணபெருமாள் அவர்கள் மோதிரம் வழங்கினார்கள்.

.


மாண்புமிகு அம்மா அவர்களின் 62 வது பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் விதமாக நெல்லை மாநகர் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பகுதி,ஒன்றிய,கழகம் வாரியாக நடைபெற இருக்கிற செயல்வீரர்கள் ஆலோசனை கூட்ட பட்டியலை மாநகர் மாவட்ட செயலாளர் தகவலின் பெயரில் பின் வருமாறு:
06.02.2010 - சனிக்கிழமை மாலை -மேலப்பாளையம் பகுதிக்கழகம் சார்பிலும்
07.02.2010 - ஞாயிறு காலை -மானூர் தெற்கு ஒன்றியக் கழகம் சார்பிலும்
மாலை - தச்சை பகுதிக் கழகம் சார்பிலும்
08.02.2010 - திங்கள்கிழமை காலை -மானூர் வடக்கு ஒன்றியக் கழகம் சார்பிலும்
மாலை - நெல்லை பகுதிக் கழகம் சார்பிலும்
09.02.2010 - செவ்வாய்கிழமை மாலை - பாளை பகுதிக் கழகம் சார்பிலும்
செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும்.இறுதியாக பிப்.14ம் தேதி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் திரளாக வந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.


நன்றி மாநகர் மாவட்ட கழகம்


நெல்லை மாநகர் அதிமுக சார்பில் எம்ஜிஆர் மன்ற அவைத்தலைவர் பி.எச்.பாண்டியன் அவர்கள் தலைமையில் மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்கள் முன்னிலையில் அண்ணா சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

.

கழகமே கோவில்... அம்மாவே தெய்வம்
நெல்லை மாவட்ட கழக செயலாளர் திரு.பாப்புலர் V முத்தையா அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் வருகிற பிப்ரவரி 24ம் தேதி மாண்புமிகு அம்மா அவர்களின் 62 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக பகுதி,ஒன்றிய,பேரூராட்சி கழக செயல்வீரர்கள் கூட்டத்தை வருகிற பிப் 10ம் தேதிக்குள் செயல்வீரர்கள் கூட்டத்தை சிறப்பாக கூட்ட ஏற்பாடு செய்திட கேட்டுக் கொண்டுள்ளார்.

.

கழகமே கோவில் அம்மாவே தெய்வம் தலைமை கழக செய்தி:
மாண்புமிகு அம்மா அவர்கள்
ஆசியுடன் மீண்டும் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளராக திரு.பாப்புலர் V.முத்தையா அவர்களை தேர்ந்தெடுத்து அறிவித்த மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து மாவட்ட கழக நிர்வாகிகள்,பிற அணி நிர்வாகிகள்,பகுதி செயலாளர்கள்,வட்ட செயலாளர்கள்,தொண்டர்கள் மாவட்ட செயலாளர் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.மேலும் பணிசிறக்க வேண்டி ஆலயங்களில் சிறப்பு பூஜை செய்து சர்க்கரை பொங்கல்,இனிப்பு வழங்கி,பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாடினர்.

.

தச்சநல்லூரில் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நடந்தது மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் ஜெரால்ட் தலைமை வகித்தார்.துணை செயலாளர் பழனி,பொருளாளர் மகபூப்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் அமைப்பு செயலாளர் திரு.P.H பாண்டியன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் சக்திகோதண்டம்,தலைமை பேச்சாளர்கள் காந்திமதி நாதன்,முகவை சண்முகம்,அவை தலைவர் முருகேசன்,MGR மன்ற செயலாளர் கணேசராஜா,MGR இளைஞர் அணி செயலாளர் மணிமாளிகை கணேஷ் பீர்முகமது மற்றும் பொது மக்கள்,கழக தொண்டர்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

.


மனிதனுக்கு மனிதன் விழா எடுக்கும்
மக்கள் மத்தியில்
தன் உழைப்புக்கும் உழவுத்தொழிலுக்கும்
தன்னுடன் சேர்ந்து உழைத்த ஏர் கலப்பைக்கும்
ஆட்டுக்கும் மாட்டுக்கும் அருவிக்கும்
உலகுக்கு ஒளி தந்து
இருள் விலக வழி தந்த கதிரவனுக்கும்
விழா எடுக்கும் தமிழனை போற்றி
தமிழன்னையை வணங்கி
பொங்கலை கொண்டாடுவோம்........

பாப்புலர் V.முத்தையா அவர்கள்
நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர்
திருநெல்வேலி மாவட்டம்.


.


அதிமுக அமைப்பு கழக தேர்தலில் கடைசி கட்டமாக 10.1.2010 அன்று மாநகர் மாவட்ட கழக அமைபிற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது.

ஏற்கனவே இருந்து வரும் நெல்லை மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் தலைமையில் காலை 10 மணிக்கு நெல்லை சகுந்தலா சுமங்கலி திருமண மன்டபத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.எதிர்கட்சியில் மாவட்ட கழக செயலாளராக மாண்புமிகு அம்மா அவர்களால் அறிவிககப்பட்டு திறம்பட செயலாற்றி வரும் மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.பாப்புலர் V. முத்தையா அவர்களுக்கு கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பு இருப்பதால் ஒரு சிலர் போட்டி ஏற்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் போட்டி வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என எதிர் பார்க்கபடுகிறது.

.நன்றி மாவட்ட கழகம்

கழகமே கோவில் அம்மாவே தெய்வம்
வருகிற ஜன 6,7.8.01.2010 ஆகிய மூன்று நாட்களில் இரண்டாம் கட்ட உள்கட்சி அமைப்பு தேர்தல் பகுதி கழகம்,ஒன்றிய,பேரூர் கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் நெல்லை மாநகர் மாவட்ட அ தி மு க அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.உள்கட்சி தேர்தல் உறுப்பினர்களிடையே சூடு பிடித்துள்ளதால் 2 ம் கட்ட தேர்தல் மிகவும் போட்டியுடன் நடைபெறும் என அதிமுகவினரிடையே எதிர்பார்க்கப்படுகிறது.

.

பாளை பகுதி 22 வது வட்ட பிரதிநிதி 1972 ல் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே உறுப்பினராக உள்ள அடையப்பா அருணாச்சலம் அவர்கள் என்பவர் நடைப்பெற்ற அதிமுக அமைப்பு தேர்தலில் 22 வது வட்ட கழக பிரதிநிதியாக போட்டியிட்டார். தற்ப்போது அறிவிக்கப்பட்ட பட்டியலில் தனது பெயர் நிக்கப்பட்டுயிருப்பதை கண்டு மன வேதனை அடைந்து தனது பெயர் நிக்கப்பட்டதுக்கு தேர்தல் பொருப்பாளர் கருப்பசாமி MLA தான் காரணம் என்றும் அதற்க்கு பிரதிபலனாக ரூபாயை பெற்று கொண்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த அடையப்பா அருணாச்சலம் இன்று 03.01.2010 முற்பகல் 12 மணியளவில் பாளை மார்க்கெட் திடல் முன்பு தன் கையில் வைத்திருந்த 5 லிட்டர் மண்ணென்னை கேன்னை தன் தலையில் உற்றி கருப்பசாமி MLA வை கண்டித்து கோஷம் விட்டவாரே தீக்குளிக்க முற்ப்பட்டார் அருகில் இருந்த புற காவல் நிலையதில் இருந்த காவலர்கள் ஓடி வந்து தடுத்தனர் .அவரை கைது செய்து விசாரனை செய்து வருகிறார்கள்.இச் சம்பவம் நெல்லை அதிமுக வினரிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

.