நெல்லையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டதில் திமுக - அதிமுகவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.இதையடுத்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.நெல்லை மாநகரை அழகுபடுத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் வண்ணார்பேட்டையில் [20.04.2010 ]நேற்று நடந்தது மாநகர் துணை போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் தலைமை வகித்தார்.நெல்லை ஆர்.டி.ஒ தமிழ்செல்வி,உதவி போலீஸ் கமிஷனர்கள் மகேந்திரன்,ராமச்சந்திரன்,மாநகராட்சி பாளை மண்டல உதவி கமிஷனர் பாஸ்கர் மற்றும் திமுக செயலாளர்கள் உலகநாதன்,சாகுல் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா,மேலப்பாளையம் பகுதி செயலாளர் ஹயாத் மற்றும் அணைத்துக்கட்சியினர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் அவினாஷ்குமார் பேசுகையில் நெல்லை மாநகரை அழகு படுத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக விளப்பரபோர்டுகள் வைக்க கூடாது போலீஸ் அனுமதியின்றி விளப்பரங்கள்,போஸ்டர்கள் ஒட்டக்கூடாது இதற்க்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.அப்போது மாவட்ட அதிமுக செயலாளர் பாப்புலர் V.முத்தையா தண்ணீர் பந்தல் வைப்பதற்க்கு கூட எதிர்க்கட்சியினருக்கு அனுமதி மறுக்கப் படுகிறது என்றார் மேலப்பாளையம் பகுதி திமுக செயலாளர் சாகுல் ஹமீது ஆளும் கட்சியினரும் முன் அனுமதி பெற்றுதான் விளம்பரம் போர்டுகள்,தண்ணீர் பந்தல்கள் அமைக்கின்றனர் என்றார்.இதற்கு அதிமுகவினர் அனுமதி பெற்றதை நிரூபிக்க முடியுமா?என்று கேட்டனர்.இது தொடர்பாக திமுக-அதிமுகவினரிடையெ கடும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது போலீசார் அவர்களை சமாதானப் படுத்தினர்.மேலும் போஸ்டர்கள்,பேனர்கள் வைக்க கூடாது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது இதற்கென கலெக்டர் தலைமையில் போக்குவரத்து கமிட்டி இருக்கிறது அந்த கமிட்டி தான் முடிவு செய்ய வேண்டும் என அனைத்துக் கட்சியினரும் கருத்து தெரிவித்தனர் எனவே முடிவு எதுவும் எடுக்கப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.வரும் 30ம் தேதி மீண்டும் இந்தக் கூட்டம் நடைபெறும் என துணை போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் தெரிவித்தார்.
.
0 comments:
Post a Comment