அதிமுக இளைஞர் பாசறைக்கு புதுவடிவில் அடையாள அட்டைநெல்லை மாநகரில் 11 ஆயிரம் பேருக்கு வினியோகம்.அதிமுக வில் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் கடந்த 2008 ம் ஆண்டு இளைஞர் இளம்பெண்கள் பாசறை உருவாக்கப்பட்டது அனைத்து மாவட்டங்களிலும் வார்டு வாரியாக உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப் பட்டது.பாசறையில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு முதலில் ஒரு இளைஞரும் இளம்பெண்ணும் அதிமுக கொடியை பிடித்திருப்பது போன்ற வடிவில் உறுப்பினர் அட்டை அச்சிட்டு வழங்கப்பட்டது.அட்டையின் பின்பக்கத்தில் உறுப்பினரின் பெயர் மற்றும் இதர விவரங்களை கையால் எழுதி வழங்கினர்.இந் நிலையில் புதிய வடிவத்தில் பாசறை உறுப்பினர் அடையாள அட்டை அச்சிட்டு தலைமை கழகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.அட்டையின் பி புறத்தில் உறுப்பினர் விவரங்கள் கம்ப்யூட்டர் மூலம் அச்சிடப்பட்டுள்ளது.நெல்லை மாநகரில் 55 வார்டுகளில் பாசறை உறுப்பினர்களாக உள்ள 5 ஆயிரத்து 859 இளம்பெண்கள்,5 ஆயிரத்து 76 இளைஞர்கள் உட்பட மொத்தம் 10 ஆயிரத்து 935 பேருக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக பாசறை மாவட்ட செயலாளர் திரு.பரமசிவன் தெரிவித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் உடன் இருந்தார்கள்.
.
0 comments:
Post a Comment