நெல்லை மாநகர் மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 11.06.2010 அன்று மாநில செயலாளர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் தலைமை யில் நடந்தது.மாவட்ட மாணவரணி செயலாளர் ஜெரால்டு வரவேற்றார்.மாநில துணை செயலாளர் சோலைகண்ணன்,மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா,பொருளாளர் மகபூப்ஜான்,துணை செயலாளர் பழனி,முன்னாள் MP முருகேசன்,மாணவரணி துணை செயலாளர் கராத்தே ஸ்டீபன்,பகுதி மாணவரணி செயலாளர் கணேசன்,காதர்,ஜான்சன்,துர்கா,பேட்டை ரமேஷ்,வக்கீல் மணிகண்டன்,டால் சரவணன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.புதிய நிர்வாகிகள் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.கூட்டத்தில் நெல்லை சந்திப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மாணவரணி ஆலோசனை கூட்டம் தொடர்பான டிஜிட்டல் பேனரை அகற்றிய போலீசாருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.மேலும் இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று மனு அளித்தனர் பேனரை அகற்றிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவரணி மாநில செயலாளர் கேட்டுக்கொண்டார்.
.
0 comments:
Post a Comment