நெல்லை டவுனில் அதிமுக சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடந்தது அண்ணா தொழிற்சங்க மாநகர் மாவட்ட இணை செயலாளர் பொன்னுசாமி தலைமை வகித்தார் தலைவர் சின்னதம்பி,பொருளாளர் அன்பழகன்,இணை செயலாளர் பகவதி முருகன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் பி.எச்.பாண்டியன் பேசுகையில் பாகிஸ்தான்,சீனாவிலிருந்து ஏராளமான கள்ள நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு நமது நாட்டில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது.இதனால் நமது நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.எனவே கள்ள நோட்டு கும்பல் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் ஜஸ்டின் செல்வராஜ்,தலைமை பேச்சாளர் அபுபக்கர்,மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவைத்தலைவர் முருகேசன் பொருளாளர் மகபூப்ஜான்,பழனி,பகுதி செயளாளர்கள் மோகன்,மாதவன்,ஹயாத்,மானூர் வேலாயுதம்,பிற அணி செயளாளர்கள் சுதா பரமசிவம்,சினனதுரை.கணேஷ்,ஜெரால்ட்,பாசரை பரமசிவன்,பரணி சங்கரலிங்கம்,அசன் ஜாபர் அலி,ராமகிருஷ்ணன்,அர்சுனன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.ஏற்பாடுகளை நெல்லை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தினர் செய்திருந்தனர்.

.

0 comments:

Post a Comment