அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் பிறந்தநாளான 24.02.2010 அன்று அதிகாலை 12 மணிக்கு நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V முத்தையா அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.சாலைக்குமார சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு 62 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது.62 பேர் பால்குடம் எடுத்து பாப்புலர் V முத்தையா அவர்கள் தலைமையில் ஊர்வலமாக வந்தனர்.ஏற்பாடுகளை மாவட்ட மகளிர் அணி துணைச்செயலாளர் புவனேஸ்வரி செய்திருந்தார் தொடர்ந்து பாளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு இலவச தொட்டில்,படுக்கை வழங்கப்பட்டன.பிஷப் சார்ஜென்ட் பள்ளியில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.அதை தொடர்ந்து பாளை பகுதியில் ரத்ததான முகாம் ஆர்.பி.ஆதித்தன்,நெல்லை தொகுதி பொருப்பாளர் பள்ளிக்கோட்டை செல்லத்துரை தலைமையில் நடந்தது.பாளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று பிறந்த 15 குழந்தைகளுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்கள் தலைமையில் மாநில M.G.R இளைஞரணி செயலாளர் சரவணபெருமாள் அவர்கள் மோதிரம் வழங்கினார்கள்.
.
Showing posts with label புரட்சித் தலைவி அம்மா பிறந்தநாள் கொண்டாட்டம்.. Show all posts
Showing posts with label புரட்சித் தலைவி அம்மா பிறந்தநாள் கொண்டாட்டம்.. Show all posts