சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை இழிவுபடுத்திப் பேசியுள்ளார் கோத்தபயா ராஜபக்சே. அவரது பேச்சுக்கு இந்தியா, இலங்கை தூதரை நேரில் வரவழைத்து கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழர்களை கொடூரமாகக் கொல்ல உத்தரவிட்டவர் கோத்தபயா. இந்த நிலையில் தமிழக சட்டசபையில் கடந்த மாதம், ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கைக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை திமுக தலைவர் கருணாநிதி உள்பட அனைத்துக் கட்சியினரும் வரவேற்றிருந்தனர்.

இந்த நிலையில் தமிழக சட்டசபைதீர்மானத்தையும், தமிழக அரசியல் தலைவர்களையும், முதல்வர் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சனம் செய்து பேட்டி அளித்துள்ளார் கோத்தபயா. இதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இந்த விவகாரம் இன்றுசட்டசபையில் எதிரொலித்தது. சட்டசபையில் எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் கோத்தபயாவுக்குக் கண்டனம் தெரிவித்தனர். கோத்தபயாவின் விஷமப் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்க வேணடும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், தமிழக சட்டசபையில் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரி வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதுவரை இந்திய அரசு நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. இதுதான் இன்று கோத்தபயா ராஜபக்சே அந்தத் தீர்மானத்தை இழிவுபடுத்திப் பேசும் அளவுக்குப் போயுள்ளது.

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கக் கூடாது என்று கூறியுள்ளார் கோத்தபயா ராஜபக்சே. இது இந்தியா இலங்கை இடையே கச்சத்தீவு தொடர்பாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் உள்ளது.

தமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க முழு உரிமையும் உள்ளது. இதை இந்திய அரசு, இலங்கையிடம் தெரிவித்து கோத்தபயாவின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

தமிழக சட்டசபை தீர்மானத்தை இழிவுபடுத்திப் பேசிய கோத்தபயாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். டெல்லியில் உள்ள இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்தியா தனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீ்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசமாகப் பேசினார் முதல்வர் ஜெயலலிதா.

இலங்கையில் சிங்களருக்கு இணையாக அந்தஸ்து தமிழர்களுக்கும் கிடைக்கும்வரை எனது அரசு ஓயாது, என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் 8.6.2011 அன்று இலங்கை உள்நாட்டுப் போரில் போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களைப் போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க ஐக்கிய நாடுகள் சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று இயற்றப்பட்ட தீர்மானத்தினை இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே விமர்சித்ததால் எழுந்துள்ள பதட்ட நிலை குறித்து இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசியதன் முழு விவரம்:

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை உள்நாட்டுப் போரின் போது, மனிதாபிமானமற்ற முறையில் ஈவு இரக்கமின்றி அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்தி அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறந்ததை நீங்கள் எல்லாம் அறிவீர்கள்.

எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், இனப் படுகொலையை நடத்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க இந்திய அரசு, ஐக்கிய நாடுகள் சபையை வற்புறுத்த வேண்டும் என்றும்; இது மட்டுமல்லாமல், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் முழு சம உரிமை கிடைக்கும் வரை அந்நாட்டின் மீது, பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 8.6.2011 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அதனை விமர்சித்து இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர், கோத்தபய ராஜபக்சே ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து இருப்பது இலங்கை அரசு தான் செய்த தவற்றை நியாயப்படுத்துவது போல் அமைந்துள்ளது.

இந்தத் தீர்மானத்தை நான் அரசியல் ஆதாயத்திற்காக கொண்டு வந்து நிறைவேற்றியதாக கோத்தபய ராஜபக்சே கூறியிருக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி...

இந்தோனேஷியாவைச் சேர்ந்த Marzuki Darusman; அமெரிக்காவைச் சேர்ந்த Steven Ratner; தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த Yasmin Sooka ஆகியோர் அடங்கிய, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் அமைக்கப்பட்ட மூன்று நபர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே ஒழிய, அரசியல் ஆதாயத்திற்காக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்பதை முதலில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சிங்களர், தமிழர் அல்லது இஸ்லாமியர் என்ற எந்தவித பாகுபாடுமின்றி அனைவரும் இலங்கையர் என்ற முறையில் தான் நடத்தப்படுகின்றனர் என்றும்; மற்றவர்களை விட தங்கள் நாட்டு குடிமக்கள் மீது தாங்கள் மிகுந்த அக்கறை கொண்டு இருப்பதாகவும் பேட்டி அளித்திருக்கிறார் கோத்தபய ராஜபக்சே இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் ஆகும்.

இலங்கையின் போர்க்குற்றங்கள்...

இலங்கை ராணுவத்திற்கும் எல்.டி.டி.ஈ.க்கும் இடையேயான போரின் உச்சகட்ட பகுதியான 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலத்தையும் அப்போது பல்வேறு திசைகளில் இருந்து வந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கிக் கொண்ட பெரும்பாலான அப்பாவி தமிழர்களின் நிலைமையையும் ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆய்வு செய்த ஐக்கிய நாடுகள் சபை குழு, இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட, குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதியின் மீது இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிந்தது; மருத்துவமனைகள் மீது குண்டுமழை பொழிந்தது; மனிதாபிமானமற்ற முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது; இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட போர்ப் பகுதி வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது; என பல மனிதாபிமானமற்ற பன்னாட்டு போர் நெறிமுறைகளை மீறிய செயல்களை இலங்கை ராணுவம் நிகழ்த்தியுள்ளதாக கண்டறிந்துள்ளது.

இது மட்டுமல்லாமல், மிகப் பெரிய ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்த பின்னரும் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் தங்கியிருந்த பகுதிகளில் குண்டுகளை வீசி பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறப்பதற்கு காரணமாக இலங்கை ராணுவம் இருந்தது என்றும் இந்த வல்லுநர் குழு சுட்டிக் காட்டியுள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடையா வண்ணம் இலங்கை அரசு தடையை உருவாக்கியதாகவும் ஐ.நா. வல்லுநர் குழு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஊடகங்களால் வெளியிடப்பட்ட கோரமான வீடியோ காட்சிகளிலிருந்து, பெரும்பாலானோர் கொடிய முறையில் கொல்லப்பட்டிருப்பதும் தெளிவாகிறது.

சாத்தான் வேதம் ஓதலாமா...

அடுத்தபடியாக, இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை கூறி இருக்கிறார் கோத்தபய ராஜபக்சே.

கச்சத்தீவிற்கு இதுவரை வந்து கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மற்றும் புனிதப் பயணிகள் இதே காரணத்திற்காக வந்து செல்லும் போது, பயண ஆவணங்களையோ அல்லது நுழை விசாவையோ பெற வேண்டும் என இலங்கை கோராது என்று இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தும் பொருட்டு, இந்திய மீனவர்கள் கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் சுதந்திரமாக மீன் பிடிக்கலாம்; மற்றும் வலைகளை உலர்த்துவதற்கு அந்தத் தீவை பயன்படுத்திக் கொள்ளலாம் என அப்போதைய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரணான வகையில் நடந்து கொண்டு விட்டு தமிழ்நாடு அரசிற்கு அறிவுரை கூறுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

தமிழருக்கு மறுவாழ்வு அளிக்கப்படவில்லை

மேலும், கோத்தபய ராஜபக்சே, வட இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதுதான் தற்போதைய முக்கியப் பணி என்றும்; போர்க் குற்றவாளிகள் என்று தற்போது கூறுவது பயனற்றது என்றும் பேட்டி அளித்து இருக்கிறார்.

இலங்கையில் நிலவும் உண்மை நிலவரம் என்னவென்றால், போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணவோ; பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்தோ எந்தவிதமான நடவடிக்கையும் இலங்கை அரசால் எடுக்கப்படவில்லை என்பதுதான்.

இவருடைய இந்தப் பேட்டியிலிருந்தே இலங்கை ராணுவம் போர்க் குற்றம் புரிந்து இருக்கிறது; இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்திருக்கிறது என்று மறைமுகமாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. உண்மையிலேயே இலங்கை ராணுவம் போர்க் குற்றம் செய்யவில்லை என்றால், இது தொடர்பான சர்வதேச விசாரணைக்கு தயார் என இலங்கை அரசு அறிவித்து இருக்க வேண்டும்.

ஆனால், அதைச் செய்யாமல் தேவையற்ற பேட்டிகளை அளித்து வருவது செய்த தவறை மூடி மறைக்கும் பணியில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகத்தை சர்வதேச நாடுகள் மத்தியில் தற்போது ஏற்படுத்தியுள்ளது.

நான் கொண்டு வந்த தீர்மானத்தின் தாக்கம்....

கோத்தபய ராஜபக்சே, நான் கொண்டு வந்த தீர்மானத்தை விமர்சிக்கிறார் என்றால், அந்த அளவுக்கு இந்தத் தீர்மானத்தின் தாக்கம் இருந்திருக்கிறது என்பதை சட்டமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இலங்கை தமிழ் சகோதர, சகோதரிகளின் நெஞ்சை பிளக்கும் துயரங்களை அறிந்த சர்வதேச நாடுகள் போர்க்குற்றத்திற்கு இனப் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருதுகின்ற சூழ்நிலையில்,

“போர்க் குற்றங்கள் நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்; தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில்; அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில்; மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்ளும் தீர்மானம் அரசியல் ஆதாயத்திற்கு அப்பாற்பட்டது" என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால்தானே இந்த பேட்டி...

இந்தச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது தான், இது போன்றதொரு பேட்டியை அளிப்பதற்கான துணிச்சலை கோத்தபய ராஜபசேவுக்கு அளித்திருக்கிறது என்ற ஐயம் நடுநிலையாளர்களுக்கு, தமிழ் உணர்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் வரை; இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படும் வரை; சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்து அவர்களுக்கு கிடைக்கும் வரை எனது தலைமையிலான அரசு ஓயாது என்பதையும்; தமிழர்களின் இந்த நியாயமான உரிமைகளை வென்றெடுக்க தேவையான ராஜதந்திர நடவடிக்கைகளை எனது அரசு எடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு;

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் பேட்டி அளித்துள்ள இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர், கோத்தபய ராஜபசேவுக்கு இந்தியத் தூதர் மூலம் தனது கண்டனத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும், என்று கேட்டுக் கொண்டு அமைகிறேன்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உடனடி முன்னுரிமை தரப்படும் ஆளுநரை சந்தித்த பின்பு புரட்சித்தலைவி அம்மா பேட்டி.


சென்னை, மே. 16
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உடனடி முன்னுரிமை அளிக்கப்படும் என முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கூறியுள்ளார்கள். ஆளுநரை சந்தித்த பின் கழகப் பொதுச்
செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆளுநர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அதன் பிவரம் வருமாறு:

கேள்வி: நீங்கள் ராஜ்பவனுக்கு வருகை தந்தது பற்றி...?
புரட்சித்தலைவி அம்மா: நான் பலமுறை ராஜ்பவனுக்கு வந்துள்ளேன். இப்போது வருவது புதிது அல்ல.

கேள்வி: தமிழக மக்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?
புரட்சித்தலைவி அம்மா: இனிவரும் காலங்களில் தமிழக மக்கள் எந்தவித அச்சமும் படத் தேவை இல்லை. மக்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழலாம்.

கேள்வி: சோனியாகாந்தி தங்களை தேநீர் விருந்துக்குஅழைத்துஇருக்கிறாரே செல்வீர்களர்?
புரட்சித்தலைவி அம்மா: எங்கள் கட்சித்தேர்தலில் வெற்றி பெற்றதற்காக சோனியாகாந்தி தொலைபேசி மூலம் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கேள்வி: நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு எதற்கு முன்னுரிமை அளிப்பீர்கள்?
புரட்சித்தலைவி அம்மா: ஏற்கெனவே கடந்த 13 ந் தேதி இதுபற்றி விரிவாக சொல்லி உள்ளேன்.

கேள்வி: மீண்டும் கேட்கிறோம், உங்கள்பணிகளில் எதற்கு மிக முன்னுரிமைகள்
வழங்குவீர்கள்?
புரட்சித்தலைவி அம்மா: முதலாவதாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீரமைக்க
வேண்டும். தமிழகத்தின் பொருளாதாரமே முற்றிலும் தடம் புரண்டு கிடக்கிறது. அதை சரியான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். கடந்த 5 ஆண்டாக தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்கு சென்றதுபோல நிலைமை உள்ளது. இதை சீர்ப்படுத்தி வளர்ச்சி பாதையில் தமிழகத்தை கொண்டு செல்ல பல்வேறு முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தொடர்ந்து தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை சரிப்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும். இப்படி நிறை
முன்னுரிமை பணிகள் உள்ளன. இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றர்க
செயல்படுத்துவோம்.

கேள்வி: எப்போது நீங்கள் டெல்லி செல்வீர்கள்?
புரட்சித்தலைவி அம்மா: முதலில் பதவி ஏற்பு நிகழ்ச்சி. அதன் பிறகு மற்றவற்றை பார்ப்போம்.

கேள்வி: பெட்ரோல் விலை உயர்வு குறித்து உங்கள் கருத்து என்ன?
புரட்சித்தலைவி அம்மா: இது மிகுந்த துரதிருஷ்டவசமான நடவடிக்கை. மக்களுக்கு
பெரும் துன்பத்தை ஏற்படுத்தும்.

கேள்வி: பதவி ஏற்பு விழாவிற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அழைப்பீர்களா?
புரட்சித்தலைவி அம்மா: நிச்சயமாக, அவர்களும் எங்களது கூட்டணியினர், அவர்களும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். எல்லோருக்கும் நிச்சயமாக அழைப்பு விடுப்போம்.

இவ்வாறு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

MGR 2011

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை இன்று திருச்சியில் ஜெயலலிதா வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

* குடும்ப ரேஷன் அட்டைதா ரர்களுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற நிலையை மாற்றி பயனாளிகள் அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

* விலைவாசி கட்டுப்பாட் டிற்குள் கொண்டு வரப்படும்.

* “எத்தனால்” எரிபொருள் உற்பத்தியை பெருக்குகிற வகையில், கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு 2,500/- ரூபாயாக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனப்படுத்தப்பட்டு, நிர்வாகம் சீரமைக்கப்படும்.

* நலிந்த கரும்பு ஆலைகள் புதுப்பிக்கப்பட்டு, சர்க்கரை மற்றும் எத்தனால் எரிபொருள் தயாரிப்பு விரிவாக்கப்படும்.

*அத்மீறி மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துகளை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

* விவசாயிகளை பங்குதாரர்களாகக் கொண்ட விவசாய நிறுவனங்கள் உருவாக் கப்பட்டு, சொட்டு நீர்ப்பாசன வசதி அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்.

* ஆண்டிற்கு 7 லட்சம் டன் பருப்பு உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பருப்பு கொள்முதல் கொள்கையை உருவாக்கி, தர வேறுபாடு இல்லாமல் துவரம் பருப்பு கிலோ 35 ரூபாய் முதல் 40 ரூபாய்க்குக் குறையாமல் கொள்முதல் செய்யப்படும்.

* குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் பருப்பு, மசாலா பொருட்கள், சமையல் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்து நுகர்வோருக்கும் வேறுபாடு இல்லாமல் வழங்க ஏற்பாடு செய்யப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும் பத்திற்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடி தண்ணீர் இலவச மாக வழங்கப்படும்.

* இதன் மூலம் 5.6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு புதிதாக உருவாக்கப்படும்.

* புதிதாக 1 லட்சம் பேருக்கு போக்குவரத்துத் துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

* இதன் மூலம் 20,000 தொழிற்சாலைகள் உருவாக வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சீரமைக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* அனைத்து மாவட்டங் களிலும் மாவட்ட மருத்துவ மனைகளில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ மற்றும் பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

* கிராமங்கள் தோறும் நடமாடும் மருத்துவமனை கிராமத்திற்கே வரும் உன்னத திட்டம் செயல்படுத்தப்படும்.

* 1500 கிராமங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தொலை தூர மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும்.

* நவீன பசுமை வீட்டு வசதித் திட்டம் - அனைவருக்கும் குறைந்த விலையில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள, சூரிய சக்தி மின்சார பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்.

* வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் 3 லட்சம் மக்களுக்கு 300 சதுர அடியில் 1,80,000/- ரூபாய் செலவில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். மேலும் 40 லட்சம் நடுத்தர வகுப்பு மக்களுக்கு இத்திட்டம் 1 லட்சம் ரூபாய் மானியத்துடன் விரிவாக்கம் செய்யப்படும்.

* வீடில்லா ஏழை குடும் பங்களுக்கு வீடு கட்ட 3 சென்டில் இடம் அளிக்கப்படும்.

* கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வாங்கப்பட்ட வீட்டுக் கடன் மற்றும் வட்டிகளால் அல்லலுறும் கடனாளிகளின் பிரச்சனைகள் களையப்படும்.

* வீடு, தொழில் மற்றும் விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். கம்ப்யூட்டர் முறையில் மின்சார மீட்டர் அளவு கணக்கிடப்படும். மேலும் அரசு துறைகளிலும், தனியார் துறைகளிலும் மின்சாரம் தவறாகப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டு மின்சாரம் சேமிக்கப்படும்.

* அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சார இணைப்பு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

* மின்சார திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத் தினரைக் கொண்டு மின்சார பாதுகாப்புப்படை அமைக்கப்படும்.

* தமிழகத்தில் இரண்டாம் விவசாய புரட்சித் திட்டம் மக்கள் இயக்கமாக அறிவிக்கப்படும். விவசாய உற்பத்தியை இரண்டு மடங்காகப் பெருக்கி, மதிப்பு கூட்டப்பட்ட விவசாய பொருட்களின் உற்பத்தியால் 9 சதவீத விவசாய வளர்ச்சியை அடைவோம்.

* தற்போதைய 8.6 மில்லியன் டன் அரிசி உற்பத்தியை 13.45 மில்லியன் டன்னாக உயர்த்துவோம்.

* விவசாயியின் தனிநபர் வருமானத்தை 2 முதல் 3 மடங்குக்கு மேல் உயர்த்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

* 30,000 ஹெக்டேர் நிலப் பரப்பை சிறப்பு சிறுபாசன திட்டத்தில் கொண்டு வருவோம்.

* விவசாய கருவிகளை அ.தி.மு.க. அரசு இலவசமாக வழங்கும்.

* மதிப்பு கூட்டப்பட்ட விவசாயத்தை தொழிலாக அறிவிக்கப்பட்டு - உணவு பதப்படுத்தும் சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு, விவசாயிகள் விவசாய நிறுவனங்களில் பங்குதாரர்கள் ஆக்கப்படுவார்கள்.

* அனைத்து மாவட்டங்களிலும் தேவைக்கேற்ற குளிர் பதன கிடங்குகள் ஏற்படுத்தப்படும். விவசாய விளை பொருள்கள் சேகரிப்பு நிலையங்களை நவீனப் படுத்துவோம்.

* விவசாய உற்பத்தி மற்றும் லாபத்தை கணக்கிட்டு அதன் அடிப்படையில் குறைந்த ஆதரவு விலை அனைத்து விவசாய விளை பொருட்களுக்கும், கரும்பின் விலையை நிர்ணயிப்பதைப் போல விலை நிர்ணயம் செய்யப்படும்.

* கடைகளில் வாங்கி உண்ணும் உணவு பொருட்களுக்கு இடைத்தரகர்கள் நீக்கப் பட்டு நியாயமான விலை நிர்ணயிக்கப்பட்டு உபயோகிப் பாளர்களுக்கும், விவசாயி களுக்கும், சில்லரை வியாபாரிகளுக்கும் பயன் தரக்கூடிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஒரு லட்சம் ஹெக்டேரில் கரும்பு பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உற்பத்தி இரண்டு மடங்காகப் பெருக்கப்படும்.

* 2012ஆம் ஆண்டுக்குள், அதாவது இரண்டு வருடங்களுக்குள் 151 நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில், நகராட்சிக் கழிவைக் கொண்டு 1000 மொகவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

* 2013ஆம் ஆண்டுக்குள் பத்து 300 மெகாவாட் சூரிய சக்தி பூங்கா உருவாக்கப்பட்டு 3000 மெகாவாட் மின்சாரம் அதன் மூலம் தயாரிக்கப்படும்.

* தெரிந்தெடுக்கப்பட்ட 160 கிராமப் பஞ்சாயத்துக்களில் 200 கிலோ வாட் உயிரிதிரள் இயற்கை எரிபொருள் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் கிராமப் புறங்களில் 64000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

* வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் வீடுகளுக்கு சூரிய ஒளி மூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கப்படும்.

* கிராமப்புற தெரு விளக்குகள் சூரிய ஒளி மின்சா ரத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழ் நாட்டை பன்முக சமூக, பொருளாதார வளம் பெற்ற மாநிலமாக மாற்றி, 1,20,000/- கோடி ரூபாய் கூடுதல் வருமானத்தை 5 வருடங்களில் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்வோம். சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லாத, அமைதியான, பாதுகாப்பான, ஒட்டு மொத்த வளர்ச்சி அடைந்த சமத்துவ தமிழகத்தை அமைப்போம்.

* நவீன மக்கள் சந்தைகள் மற்றும் பொருட்களை பதப்படுத்தப்பட வேண்டிய குளிர்சாதன வசதிகள் செய்து தரப்படும்.

* பருத்தி உற்பத்தியை மற்றும் விளைச்சலை இரண்டு மடங்காக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* 6 ஆடை அலங்கார சிறப்பு பொருளாதார மண்டலங்கள் துவக்கப்படும். இதன் மூலம் தமிழ் நாட்டில் 70 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

* 10 ஆடை அலங்கார பூங்காக்கள் உருவாக்கப்படும்.

* மீண்டும் ஒரு வெண்மை புரட்சியை உருவாக்க திட்டம் தீட்டப்படும்.

* 2016ஆம் ஆண்டுக்குள் 6000 கிராமங்களில் சீரமைக்கப்பட்ட பால் பண்ணைகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* பால் உற்பத்தியை தினமும் 2.5 மில்லியன் லிட்டரில் இருந்து 10 மில்லியன் லிட்டராக பெருக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அதை ஊக்குவிக்கும் வகையில் 6000 கிராமங்களில் சுமார் 60,000 பால் கறவை மாடுகள் இலவசமாக வழங்க வழிவகைகள் செய்யப்படும்.

* 2015க்குள் 100 பெரிய பால் பண்ணைகள், பால் பதப்படுத்தும் நிலையங்கள், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கும் சிறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்.

* அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு இதன் மூலம் கிராமப் புறங்களில் சுய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

* வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். கால்நடை வளத்தைப் பெருக்கும் வகையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.

* 30லிருந்து 40 கிராமங்கள் வரை இணைக்கப்பட்டு, அவற்றிற்குத் தேவையான அடிப்படை சாலை மற்றும் கட்டமைப்புகள், தொலைத் தொடர்பு இணைப்புகள், அறிவுசார் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாக கிராமப்புற பொருளாதார மேம்பாடு அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* மாணவர்களின் புத்தகச் சுமை குறைக்கப்படும்.

* மாணவர்களுக்கு 4 சீருடைகளும், காலணிகளும் இலவசமாக வழங்கப்படும்.

* அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக 1,000/- ரூபாய் முதல் 5,000/- ரூபாய் வரை வழங்கப்படும்.

* பள்ளியில் படிக்கும் +1 மற்றும் +2 மாணவ, மாணவியர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் இலவசமாக வழங்கப்படும்.

* பள்ளிக் குழந்தைகளை பாதுகாக்க மாணவர் சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்படும். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை பற்றிய பயம் பெற்றோர்களுக்கு இல்லாத நிலை உருவாக்கப்படும்.

* மன வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு சிறப்புத் திட்டம் வகுக்கப்படும்.

* பல்கலைக்கழகங்களின் தரம் உலகத் தரத்திற்கு இணையாக உயர்த்தப்பட்டு, சீர்படுத்தப்படும்.

* மாணவர்களின் பன்முக திறனை ஊக்குவிக்க தனித் திறமை மற்றும் அறிவுசார் வளர்ச்சிக் கழகம் உருவாக்கப்படும்.

* அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் (கலை, அறிவியல் மற்றும் பொறியியல்) மற்றும் பல் தொழில் பட்டய கல்லூரிகளில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் வழங்கப்படும்.

* மீனவர் பாதுகாப்பு படை அமைக்கப்படும்.

* இயந்திர மீன்பிடி படகுகள் வாங்கத் தேவையான மானியம் வழங்கப்படும். * 13 குளிர்சாதன மீன் பூங்காக்கள் அமைக்கப்படும்.

* மீன் உற்பத்திக்கு உகந்த வழியில் மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்பட்ட 45 நாட்களில், மீனவ குடும்பத்திற்கான உதவித் தொகை 2,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். * பருவ காலத்தால் 4 மாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இயலாத சூழ்நிலையில் இருக்கும் மீனவ குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4,000/- ரூபாயாக வழங்கப்படும்.

* கச்சத் தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர் நலன் காக்கப்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

* தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் தொழில் தொடங்க முனைவோருக்கு 25 சதவீத மானியத்தில் கடன் உதவித் தொகை வழங்கப்படும்.

* மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மாவட்டம் தோறும் மண்பாண்ட தொழிற்கூடங்கள் அமைத்துத் தரப்படும்.

* படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் பல்வேறு தொழில் பூங்காக்களில் 25 சதவிகிதம் தொழில் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

* வீடுகளில் நடைபெறும் திருட்டு, கொள்ளைகளை முற்றிலும் தடுக்க தற்காப்பு கலை பயின்ற இளைஞர்களைக் கொண்டு சிறப்பு சுய பாதுகாப்பு படைகள் அமைக்கப்படும். அவர்கள் சம்பவம் நடக்கும் இடத்திற்கு விரைந்து வந்து தடுத்து பாதுகாக்க நவீன முறைகளுடன் பயிற்சி அளிக்கப்படும். வீட்டை பூட்டி வெளியூர் செல்லும் மக்களின் வீடுகளும் பாதுகாக்கப்படும்.

* சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். அதில் 25 சதவிகிதம் வரை மானியம் வழங்கப்படும்.

* பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தொழில்நுட்பத்தின் மூலம் கிராமப்புறச் சாலைகள் அனைத்தும் புதிதாக போடப்பட்டு, பிளாஸ்டிக் கழிவு இல்லாத கிராமங்கள், நகரங்கள் உருவாக்கப்படும்.

* திருநங்கைகளுக்கான சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரையிலான மதிப்பீட்டில் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும்.

* தாய்மார்களுக்கு ஒரு காற்றாடி, ஒரு மிக்ஸி, ஒரு கிரைண்டர் ஆகிய மூன்று பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.

* குழந்தையை பேணி பாதுகாக்க பணிபுரியும் தாய்மார்களுக்கு மகப்பேறு காலச் சலுகையாக 6 மாத விடுமுறையும், 12,000/- ரூபாய் நிதி உதவியும் வழங்கப்படும்.

* 58 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அரசு பேருந்துகளில் பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.

* முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற முதிய ஆண்கள் மற்றும் பெண்கள், ஆதரவற்ற குழந்தைகள் தங்குவதற்கு சிறப்பு தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்படும்.

* அங்கு அவர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படும்.

* இலங்கை தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் அடிமைகள் போல் வாழும் நிலைமையை மாற்ற மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

* இலவச திட்டங்கள் இலங்கை தமிழ் அகதிகள் முகாமுக்கும் நீட்டிக்கப்படும்.

* தமிழ் நாட்டு நதிகளை இணைக்கும் நவீன நீர்வழிச் சாலை உலக வங்கி கடன் பெற்று செயல்படுத்தப்படும்.

* காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழ் மொழியின் பெருமையை மற்ற மொழியினரும் உணர்ந்து அதைப் பற்றி அறிய, திருக்குறள், தமிழ் காப்பியங்கள், இலக்கண இலக்கியங்கள், புராண, இதிகாச நூல்கள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் மற்றும் பல்வேறு வரலாற்று புகழ் பெற்ற நூல்களை பல்வேறு இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், சீன, அரேபிய மற்றும் உலகில் அதிக மக்கள் பேசும் மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, இணைய தளத்தில் இடம்பெறச் செய்து, நமது தமிழ் மொழியின் பெருமை உலகமெல்லாம் பரவ வழிவகை செய்யப்படும்.

* தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப் பில் முன்னுரிமை கொடுக்கப் படும். அரசு ஊழியர் நலன்

* அரசு ஊழியர்கள் நலன்கள் பாதுகாக்கப்பட்டு, அவர்களது உடல் நலம், மனநலம் பேணப்பட்டு, தமிழக அரசு ஊழியர்கள் இந்தி யாவிலேயே திறம்பட பணியாற்றும் சூழல் உருவாக்கப்படும்.

* அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி வரன் முறை உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளும் பேச்சு வார்த்தை மூலம் அவ்வப் போது நிறைவு செய்யப்படும்.

* அரசு ஊழியர்கள் தற்போது அனுபவித்து வரும் அனைத்து சலுகைகளும் தொடரும்.

* மாற்றுத் திறனாளிகளுக் கென 3 சதவீத இட ஒதுக் கீடு அரசுப் பணியில் ஒதுக் கப்படும். * அரசு கட்டிடங்கள் மற்றும் பொது இடங்கள், பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மாற்றுத் திறனாளிகள் உபயோகிக்கும் வகையில் உடனடியாக மாற்றம் செய்யப்படும்.

* தமிழகத்தில் கேபிள் டிவி தொழில் அரசுடமை யாக்கப்படும்; ஏகபோகம் தடுக்கப்படும். அனைவருக்கும் தொழில் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

* அனைத்து மக்களுக்கும் அரசு கேபிள் டிவி இணைப்பு அரசு மானியத்துடன் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்.

* டி.டி.எச். சேவைகள் மக்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* கேபிள் டிவி மூலமாக கடைசி மைலில் வீட்டுக்கு இணைப்பு கொடுப்பவர்களது தொழில் பாதுகாக்கப்படும். அவர்கள் தொடர்ந்து தொழில் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* மொபைல் மின்அணு ஆளுமை திட்டம் செயல் படுத்தப்படும்.

* சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூருக்கு சிங்கப்பூரில் உள்ளபடி மோனோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

* தற்போது வழங்கப்பட்டு வரும் 25,000/- ரூபாயுடன், தங்கத்தின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, 4 கிராம் (1/2 சவரன்) தங்கம் மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.

* இளநிலை அல்லது டிப்ளொமா பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகை 50,000/- ரூபாய் மற்றும் 4 கிராம் தங்கம் திருமாங்கல்யம் செய்ய இலவசமாக வழங்கப்படும்.

* காவல் துறையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

* புலனாய்வு மற்றும் சைபர் குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு நவீனபடுத்தப்படும்.

* சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, வி.ஐ.பி. மற்றும் பாதுகாப்பு படைகள் தனியாக பிரிக்கப்பட்டு, அவர்களது எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்த வழிவகை செய்யப்படும்.

* பணியில் மரணமடையும் காவலர்களுக்கு - கருணைத் தொகை 3 லட்சம் ரூபாய் அளவிற்கு உயர்த்தப்படும்.

* காவல் துறையினருக்கு சிறப்பு மன வளக்கலை பயிற்சி நடத்தப்படுவதோடு, அவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஒவ்வொரு வருடமும் இலவசமாக நடத்தப்படும்.

* ஆட்டோமொபைல், தொலைத் தொடர்பு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கட்டுமானத் துறை, கப்பல் கட்டும் துறை போன்ற துறைகள் ஊக்குவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

* நடைமுறையில் உள்ள மதுரை - தூத்துக்குடி - அருப்புக்கோட்டை காரிடார் - “தன்னிறைவு கொண்ட இன்டஸ்டிரியல் காரிடார்” ஆக அறிவிக்கப்பட்டு அதற்கு தேவையான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

* கப்பல் கட்டுமானத் துறையில் 10,000 கோடி ரூபாய் அந்நிய நாட்டு முதலீடு ஈர்க்கப்படத் தேவையான பல்முனை முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் - அதன் மூலம் தமிழகத்தை கப்பல் கட்டும் துறையில் முன்னோடியாக்குவோம்.

* தென் தமிழகத்தில் “ஏரோ பார்க்“ ஏற்படுத்தத் தேவையான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* திருப்பூர் சாயக் கழிவு பிரச்சனையை பரிசீலித்து அதன் கழிவுகளை சுத்தி கரிக்கத் தேவையான தொழில் நுட்பத்துடன் விஞ்ஞான வழியில் கழிவு அகற்றும் நிலையம் உருவாக்கப்படும்.

* முதியோர், உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு மாத உதவித் தொகை 1,000/- ரூபாய் அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும்.

* அரசு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு அரசு மானியம் இரண்டு மடங்காக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* கிராம நிர்வாக அலு வலர்கள் தேர்வு முடிவுகள் உட்பட அனைத்து தேர்வு முடிவுகளும் உடனடியாக வெளியிட ஆவன செய்யப்படும்.

* மருத்துவ கல்வி பொது நுழைவுத் தேர்வு முறை தமிழகத்தில் அமுல் படுத்தப்பட மாட்டாது.

* உழவர் பாதுகாப்புத் திட்டம் மீண்டும் நவீன காலத்திற்கு ஏற்ற வடிவில் புதிய பொலிவுடன் சிறப்பான முறையில் செயல் படுத்தப்படும்.

* 108 ஆம்புலன்ஸ் திட்டம் மேம்படுத்தப்பட்டு, ஆம்புலன்ஸ் ஊர்திகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

* ஒவ்வொரு வருடமும் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜாதிச் சான்றிதழ் மற்றும் பள்ளி சார்ந்த இதர சான்றிதழ்கள் அனைத்தும் பள்ளியிலேயே வழங்கப்படும்.

* சத்துணவுப் பணியாளர்களின் பணி மற்றும் ஊதியம் தொடர்பாக பிரச்சனைகள் முன்னுரிமையோடு அணுகப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்.

* போக்குவரத்து தொழி லாளர் நலன் பேணப்பட சிறப்புத் திட்டங்கள் தீட்டப்படும்.

* சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு திட்டம் நடை முறைபடுத்தப்படும்..அம்மா அவர்களின் 63 வது பிறந்தநாளை முன்னிட்டு மானூர் ரஷ்தாவில் மாட்டு வண்டி போட்டி
மற்றும் குதிரை வண்டி போட்டிகள் நேற்று நடந்தன. நெல்லை சட்டமன்ற தொகுதி செயலாளர் பள்ளிக்கோட்டை A.செல்லதுரை தலைமை வகித்தார்.பெரிய மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டிகளை வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு P.H மனோஜ்பாண்டியன் M.P துவங்கி வைத்தார்.முன்னதாக நெல்லை தொகுதி இணைசெயலாளர்கள் பால்கண்ணன் பரமசிவன் வரவேற்றனர்.இதில் மாநகர மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா,மாநகர் அவைத்த்தலைவர் திரு.முருகேசன்,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில இணைச்செயலாளர் திரு.S.சரவணப்பெருமாள்,குமாரராஜா,பரமசிவம்,நாராயணன்,M.G.R மன்றம் தச்சை கணேஷ் ராஜா,செல்லதுரை,திருவை. சின்னதுரை,அசன் ஜாபர் அலி,அண்ணாமலை,மாவட்ட அண்ணா தொழிற்சங்க பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி,மானூர் ஒன்றிய இளைஞர் அணி துனை செயலாளர் குமார் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும்,நலதிட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.செல்லதுரை,முத்துபாண்டி நன்றி கூறினர்.நிகழ்ச்சி ஏற்ப்பாடினை நெல்லை சட்டமன்ற  அதிமுக தொகுதியினர் செய்திருந்தனர்.

.

 நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மானூர் வடக்கு ஒன்றியம் இத்திகுளத்தில் பொதுக்கூட்டம் நடந்தது மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V முத்தையா அவர்கள் தலைமை வகித்தார் மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.பள்ளிக்கோட்டை A.செல்லதுரை,சின்னதுரை,ஆர்யாபாலு,அசன் ஜாபர் அலி,அப்ரீன் பீர்முகமது,ராமு வெங்கடாசலம்,கபாலி,முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் நெல்லை தெற்க்குப்பட்டி கூட்டத்திக்கு சென்ற போது  மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்களிடம் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.5 லட்சம் நிதி வேண்டிஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.மனுவை பெற்றுகொண்ட அவர்கள் மனோஜ் பாண்டியன் M.P நிதியிலிருந்து எற்பாடு செய்வதாக தெரிவித்தார்.


.

விளம்பர போர்டுகளை அகற்றகோரி நெல்லையில் அதிமுகவினர் மறியல்
பாளை மேரி சார்ஜன்ட் பள்ளிக்கு இடையுறாக திமுகவினர்  சார்பில் விளம்பர போர்டு  வைக்கப்பட்டது.அதை அகற்ற கோரி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V. முத்தையா அவர்கள் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.துணை செயலாளாளர் பழனி,கவிதா கோமகன் முன்னிலை வகித்தனர்.
MGR மன்ற செயலாளர் கணேஷ் ராஜா,மாவட்ட பொருளாளர் மகபூப்ஜான்,ஆதித்தன்,பொன்னுசாமி,மகளிரணி செயலாளர் ஜெயராணி,மகளிரணி விஜிலா சத்யானந்த்,அசன் ஜாபர் அலி,மாணவரணி ஜெரால்டு உட்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் மறியலில் ஈடுபட்ட 128 பேரை போலீசார் கைது செய்தனர்.

.