கழகமே கோவில்... அம்மாவே தெய்வம்
நெல்லை மாவட்ட கழக செயலாளர் திரு.பாப்புலர் V முத்தையா அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் வருகிற பிப்ரவரி 24ம் தேதி மாண்புமிகு அம்மா அவர்களின் 62 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக பகுதி,ஒன்றிய,பேரூராட்சி கழக செயல்வீரர்கள் கூட்டத்தை வருகிற பிப் 10ம் தேதிக்குள் செயல்வீரர்கள் கூட்டத்தை சிறப்பாக கூட்ட ஏற்பாடு செய்திட கேட்டுக் கொண்டுள்ளார்.

.

கழகமே கோவில் அம்மாவே தெய்வம் தலைமை கழக செய்தி:
மாண்புமிகு அம்மா அவர்கள்
ஆசியுடன் மீண்டும் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளராக திரு.பாப்புலர் V.முத்தையா அவர்களை தேர்ந்தெடுத்து அறிவித்த மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து மாவட்ட கழக நிர்வாகிகள்,பிற அணி நிர்வாகிகள்,பகுதி செயலாளர்கள்,வட்ட செயலாளர்கள்,தொண்டர்கள் மாவட்ட செயலாளர் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.மேலும் பணிசிறக்க வேண்டி ஆலயங்களில் சிறப்பு பூஜை செய்து சர்க்கரை பொங்கல்,இனிப்பு வழங்கி,பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாடினர்.

.

தச்சநல்லூரில் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நடந்தது மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் ஜெரால்ட் தலைமை வகித்தார்.துணை செயலாளர் பழனி,பொருளாளர் மகபூப்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் அமைப்பு செயலாளர் திரு.P.H பாண்டியன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் சக்திகோதண்டம்,தலைமை பேச்சாளர்கள் காந்திமதி நாதன்,முகவை சண்முகம்,அவை தலைவர் முருகேசன்,MGR மன்ற செயலாளர் கணேசராஜா,MGR இளைஞர் அணி செயலாளர் மணிமாளிகை கணேஷ் பீர்முகமது மற்றும் பொது மக்கள்,கழக தொண்டர்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

.


மனிதனுக்கு மனிதன் விழா எடுக்கும்
மக்கள் மத்தியில்
தன் உழைப்புக்கும் உழவுத்தொழிலுக்கும்
தன்னுடன் சேர்ந்து உழைத்த ஏர் கலப்பைக்கும்
ஆட்டுக்கும் மாட்டுக்கும் அருவிக்கும்
உலகுக்கு ஒளி தந்து
இருள் விலக வழி தந்த கதிரவனுக்கும்
விழா எடுக்கும் தமிழனை போற்றி
தமிழன்னையை வணங்கி
பொங்கலை கொண்டாடுவோம்........

பாப்புலர் V.முத்தையா அவர்கள்
நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர்
திருநெல்வேலி மாவட்டம்.


.


அதிமுக அமைப்பு கழக தேர்தலில் கடைசி கட்டமாக 10.1.2010 அன்று மாநகர் மாவட்ட கழக அமைபிற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது.

ஏற்கனவே இருந்து வரும் நெல்லை மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் தலைமையில் காலை 10 மணிக்கு நெல்லை சகுந்தலா சுமங்கலி திருமண மன்டபத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.எதிர்கட்சியில் மாவட்ட கழக செயலாளராக மாண்புமிகு அம்மா அவர்களால் அறிவிககப்பட்டு திறம்பட செயலாற்றி வரும் மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.பாப்புலர் V. முத்தையா அவர்களுக்கு கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பு இருப்பதால் ஒரு சிலர் போட்டி ஏற்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் போட்டி வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என எதிர் பார்க்கபடுகிறது.

.நன்றி மாவட்ட கழகம்

கழகமே கோவில் அம்மாவே தெய்வம்
வருகிற ஜன 6,7.8.01.2010 ஆகிய மூன்று நாட்களில் இரண்டாம் கட்ட உள்கட்சி அமைப்பு தேர்தல் பகுதி கழகம்,ஒன்றிய,பேரூர் கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் நெல்லை மாநகர் மாவட்ட அ தி மு க அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.உள்கட்சி தேர்தல் உறுப்பினர்களிடையே சூடு பிடித்துள்ளதால் 2 ம் கட்ட தேர்தல் மிகவும் போட்டியுடன் நடைபெறும் என அதிமுகவினரிடையே எதிர்பார்க்கப்படுகிறது.

.

பாளை பகுதி 22 வது வட்ட பிரதிநிதி 1972 ல் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே உறுப்பினராக உள்ள அடையப்பா அருணாச்சலம் அவர்கள் என்பவர் நடைப்பெற்ற அதிமுக அமைப்பு தேர்தலில் 22 வது வட்ட கழக பிரதிநிதியாக போட்டியிட்டார். தற்ப்போது அறிவிக்கப்பட்ட பட்டியலில் தனது பெயர் நிக்கப்பட்டுயிருப்பதை கண்டு மன வேதனை அடைந்து தனது பெயர் நிக்கப்பட்டதுக்கு தேர்தல் பொருப்பாளர் கருப்பசாமி MLA தான் காரணம் என்றும் அதற்க்கு பிரதிபலனாக ரூபாயை பெற்று கொண்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த அடையப்பா அருணாச்சலம் இன்று 03.01.2010 முற்பகல் 12 மணியளவில் பாளை மார்க்கெட் திடல் முன்பு தன் கையில் வைத்திருந்த 5 லிட்டர் மண்ணென்னை கேன்னை தன் தலையில் உற்றி கருப்பசாமி MLA வை கண்டித்து கோஷம் விட்டவாரே தீக்குளிக்க முற்ப்பட்டார் அருகில் இருந்த புற காவல் நிலையதில் இருந்த காவலர்கள் ஓடி வந்து தடுத்தனர் .அவரை கைது செய்து விசாரனை செய்து வருகிறார்கள்.இச் சம்பவம் நெல்லை அதிமுக வினரிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

.