அனை

த்து இந்திய "அண்ணா" திராவிட முன்னேற்ற கழக
38 வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி நெல்லையில் மாநகர அ.தி.மு.க சார்பில்
முன்னாள் அமைச்சர் திரு.ஜனார்த்தனம் அவர்கள் தலைமையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் (மாநகர் மாவட்ட செயலாளர்)மற்றும் கழக உடன் பிறப்புக்கள் அனைவரும் கலந்து கொன்டனர்.

"கரு 'இருள் ஆளும் தமிழகத்தில்
வெளிச்சத்திற்கு விழாவா?
தயார் படுத்திக்கொள்ளுங்கள் உங்கள்
சுட்டுவிரல் தீக்குச்சியை
அடுத்த தேர்தலில்
அம்மா எனும் வெளிச்சம் விரிக்க..
ஆம்! அன்றுதான் நமக்கு தீப ஒளி நாள்.....

உங்களில் ஒருவன்....
பாப்புலர் V.முத்தையா
மாநகர் மாவட்ட கழக செயலாளர் அவர்கள்
திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மானூர் தெற்க்கு,வடக்கு ஒன்றிய கிளைக்கழக செயலாளர்கள்,ஒன்றிய கவுன்சிலர்கள்,ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் தீபாவளி திருநாள் வாழ்துக்கள் பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு திரு.பாப்புலர் V.முத்தையா மாநகர் மாவட்ட கழக செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நாள்;14.10.2009 இடம்;நெல்லை மாநகர் மாவட்ட கழக அலுவலகம்.நேரம்;மாலை 5 மணிசங்கணாங் குளம்!..வெம்மை மட்டுமே அப்பியிருக்கும் ஒரு கிராமம்...திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரிக்கு அப்பால் திசையன்விளை நோக்கி பயணிக்கும் வழியில் வெள்ளந்தி மனிதர்களைப் பிரசவிக்கும் இந்த கிராமத்தில்தான் ஓர் ஏழைக் குடும்பத்தின் மூன்றாவது முத்தாக திரு முத்தையா அவர்கள் பிறந்தார்....
அவரது தந்தை திரு M.வள்ளிநாயகம்,தாயார் திருமதி V.லெட்சுமியம்மாள்..
உடன்பிறந்தவர்கள் 2 சகோதாரர்கள்,2 சகோதரிகள்...இவரது குடும்பம் சிறு வயதிலேயே ஏழ்மையின் நிமித்தம் திருநெல்வேலி டவுணுக்கு புலம்பெயர்ந்ததால் இவரது வாழ்க்கை நகர் சார்ந்த சூழலுக்கு மாறியது.....இருப்பினும் தனது ஏழ்மைத் தன்மை மாறாது கிராமத்திற்கேயுரிய தாய்த் தன்மையோடு தன் சக மனிதர்களை அனுகினார்...
தனது பள்ளி வாழ்க்கையை கதீட்ரல் பள்ளியில் தொடங்கியவர் மேல் நிலைக் கல்வி வரை அங்கேயே தொடர்ந்தார்..
சிறு வயதிலேயே அதீத சுறுசுறுப்பும்,துள்ளலும்..மானுட சேவை குறித்த தீவிர முனைப்பும் அவரிடையே நிரம்பியிருந்ததால் நண்பர்களும் நிரம்பியிருந்தனர்...
தனது 13 வது அகவையிலேயே தன் நண்பர்களை இணைத்துக்கொண்டு,வீதிகளில் உண்டியல் ஏந்தி,அதன் மூலம் கிடைத்த நிதியில் பொதுமக்களின் நலனுக்காக பாளையில் ஒரு பேருந்துநிறுத்தத்தை ஏற்படுத்திக் கொடுத்து(ராம்பாப்புலர் பஸ்டாண்ட்) அனைத்து சமூக மக்களையும் ஆச்சரியப்பட செய்தவர்.இதுவே அவர்தம் அரசியல் பொதுவாழ்க்கையில் முதல் மைல்கல்லாக கருதப்படுகிறது....
மாண்புமிகு புரட்சித்தலைவர் MGR மீதிருந்த பக்தியின் நிமித்தம் அவர்தம் வழியில் தம் பயணத்தை தொடங்க 1979 ஆம் ஆண்டு தங்கத் தமிழன் எம்.ஜி.ஆர் மன்றம் தொடங்கி வைத்து அதற்கான அலுவலகமும் ஏற்படுத்திக் கொடுத்தார்....
அதன்பிறகே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார்...
அவர்தம் தீவிர செயல்பாடு,அனைத்து சமூகத்தினரையும் இணைக்கும் பாங்கு,கடின உழைப்பு போன்றவை அவரை இளம் வயதிலேயே பாளையங்கோட்டூர் பகுதி பஞ்சாயத்து தலைவராக பதவியேற்க வைத்தது..
1986 ஆம் ஆண்டு அவர் பஞ்சாயத்து தலைவராகப் பதவியேற்றதிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களைஅறிவித்து ,செயல்படுத்தி மக்களின் ஒருமித்த ஆதரவைப் பெற்றார்..(.Nellai City AIADMK: பாப்புலர் V.முத்தையா அவர்கள் பாளையங்கோட்டூர் ஊராட்சிமன்ற தலைவராக பதவியேற்ற காலத்தில் செய்த சேவைகள்)
அதன் பிறகு பாளை பகுதி இளைஞரணி கழக செயலாளராகவும்,தொடர்ந்து முறையே 15 மற்றும் 16 வது வட்டச் செயலாளராகவும் திறம்பட செயாலாற்றி வெற்றிகண்டார்..
1996 லிருந்து 2007 வரை பாளை பகுதி கழக செயலாளராக சிறப்பாக செயலாற்றினார்...இக் காலத்தில்தான் கழகத்தை சார்ந்த 27 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை மிகப் பிரம்மாண்டமாக நடத்திவைத்தார்.
20/01/2007 முதல் மாண்புமிகு புரட்சித்தலைவி ,கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர் அம்மாவின் ஆணைக்கிணங்க நெல்லை மாநகர மாவட்ட செயலாளராகப் பொறுப்பேற்று பல் வேறு நலத்திட்ட உதவிகளோடு ,கழகத்தினரை அன்பாக ஒருங்கிணைத்து வழிநடத்தி,சிறப்பாக செயல்பட்டு வருகிறார்..மாநகர மாவட்ட செயலாளராக பதவியேற்ற உடனேயே முதல் அறிவிப்பாக மைனாரிட்டி திமுக அரசு கலையும் வரை சனிக் கிழமை தோறும் வாராந்திரப் பொதுக்கூட்டம் நடைபெரும் என அறிவித்து இன்று வரை 125 தொடர் பொதுகூட்டங்களை சிறப்பாக நடத்தி வெற்றிகண்டு வருகிறார்...பொது மக்களிடமும்,கழகத் தொண்டர்களிடமும் சிறப்பான வரவேற்பை பெற்று அவர்களின் குறைகளைக் கேட்டுத், தெரிந்து அதனை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறார்..


.


நெல்லையில்102 வது தேவர் ஜெய்ந்தி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஸ்.முருகேஷசன் அவர்கள் தலமையில் பாப்புலர் V.முத்தையா அவர்கள் முன்னிலையில் மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


நெல்லை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு[02.10.2009]காலை 10.30 மணியளவில் திரு.சரவணப்பெருமாள் அவர்கள்[மாநில இளைஞர் அணி துணை செயலாளர்]தலைமையில் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள்,[நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர்],S.முருகேசன் Ex.M.P அவர்கள் முன்னிலையில் டவுண் சந்திப் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.கழக உடன் பிறப்புகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்

நெல்லையில் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள் பிறந்தநாள் நாள்;02.10.2009
காணொளி

நெல்லை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகில் 02.10.2009 அன்று காலை 10 மணியளவில்
தலைமை; திரு.S. சரவணப்பெருமாள் அவர்கள்,[மாநில இளைஞர் அணி துணை செயலாளர்]முன்னிலை; திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள்[நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர்]திரு.கர்மவீரர் காமராஜர் சிலைக்கு மாலை அனுவிக்கபட்டது உடன் முன்னாள் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் S.முருகேசன் அவர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.நெல்லை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் திரு.கர்மவீரர் காமராஜர் சிலைக்கு மாலை அனுவிக்கபட்டது.
காணொளி