இதய தெய்வம் அம்மா அவர்கள் ஆணைக்கினங்க நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் இன்று 26.12.2009 இரவு 7 மணியளவில் 139 வது தொடர் சனிக்கிழமை பொதுக்கூட்டம் மானூரில் கழக சிறப்பு பேச்சாளர் திரு.தீப்பொறி ஆறுமுகம் மற்றும் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.பொது மக்கள்,கழக தோழர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.இன்று 26.12.2009 காலை பாளை பகுதியில் சாலையில் திரியும் மாடுகளை போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து பவுண்டியில் அடைத்து வருகின்றனர்.இதற்கு எதிர்பு தெரிவித்து தெற்கு பஜாரை சேர்ந்த மாட்டு உரிமையாளர்கள்,யாதவர் மகாசபை நெல்லை மாவட்ட தலைவர் திரு.குற்றால முருகன்,நெல்லை மாவட்ட மாநகர் செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் மற்றும் தொண்டர்கள் போலீஸ்சாரின் அத்துமீறலை கண்டித்து சாலை மறியலில் ஈடுப்பட்டு மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து பேச்சு நடத்த வேண்டும் என வலியுருத்தி தொடர்ந்து சாலை ஓரம் அமர்ந்து தர்ணாவில் ஈடு பட்டனர்.நெல்லை அதிமுக வினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

.

நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஊனமுற்ற சிறுவனுக்கு மூன்று சக்கர சைக்கிள் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா வழங்கினார்கள் உடன் S. முருகேசன்,S.பழனி,A.மகபூப்ஜான்,S.S ஹயாத்

.

திமுக ஆட்சி பொன்விழா தவறானது என்பதை கண்டித்து மாவட்ட கழகம் சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் கழக பேச்சாளர் காந்திமதி நாதன் பேசிய போது உடன் பாப்புலர் முத்தையா,முருகேசன்,பழனி, ssஹாயாத்

.

முன்னாள் முதல்வர் M.G.R அவர்களின் 22வது நினைவு நாளயொட்டி நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கொக்கிரகுளதில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட செயலாளர் திரு பாப்புலர் V.முத்தையா தலைமையில் அதிமுக வினர் மாலை அணிவித்தனர்.மாவட்ட அவைத் தலைவர் திரு.முருகேசன்,துணை செயலாளர் பழனி அவர்கள்,பொருளாளர் திரு.மகபூப்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கழக தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

.

18.12.2009 சனிக்கிழமை இரவு 7 மணியளவில் மைனாரிட்டி தி.மு.க அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பேட்டை பல்லிமால் தெருவில் தலைமை கழக பேச்சாளர் திரு.மின்னல் மீனாட்சி சுந்தரம் மற்றும் மாவட்ட கழக செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் கழக தோழர்கள்,பொது மக்கள் திரளாக வந்து சிறப்பித்தனர்.

.


இதயதெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆசியோடு அனைவருக்கும் நெல்லை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் இனிய கிறிஸ்துமஸ் ற்றும் 2010 புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறார். இந் நன்நாள் அனைவருக்கும் பொன்நாளாக அமைந்திடவும், இனிவரும் நாட்களில் எல்லோருக்கும் எல்லா வளமும், நலமும் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

.


இன்று 17.12.2009 அன்று காலை முதல் மாலை வரை அதிமுக வேட்பாளர் திரு.அம்மன் T.நாராயணன் மற்றும் திரு.ஓ.பன்னிர் செல்வம் ,இளைஞர் பாசரை செயலாளர் திரு.டாக்டர் S. வெங்கடேஷ்,நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு பாப்புலர் V.முத்தையா மற்றும் நிர்வாகிகள்,பொதுமக்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.

.

நெல்லையில் Dr.அம்பேத்கர் அவர்கள் 53 வது நினைவு தினம் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சட்ட மேதை Dr. அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தன்று காலை 11 மணி அளவில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் தலைமையில் மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மற்றும் பொருளாளர் மகபூப்ஜான்,துணைஅ செயலாளர் பழனி,முன்னாள் M.P. முருகேஷன்,M.G.R இளைஞரணி செயலாளர் மணிமாளிகை கணேஷ்,ஈஸ்வர கணபதி,பாலமுருகன்,பகுதி செயலாளர்கள் தச்சை மாதவன்,சந்திரசேகர்,வக்கீல் மணிகண்டன்,MC ராஜன்,வக்கீல் துரை முத்துராஜ்,சி.பா முருகன்,டால் சரவணன் மற்றும் கழக உடண்பிறப்புக்கள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


.

நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சனிக்கிழமை தோறும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது 05.12.2009 அன்று இரவு 7 மணியளவில் 136 வது வாராந்திர பொதுக்கூட்டம் நெல்லை டவுன் வாகையடி முனையில் கழகப் பேச்சாளர் திரு.தீ கணல் லட்ச்சுமணன் சிறப்புரை ஆற்றினார்கள்.பொது மக்கள் மற்றும் கழக தோழர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

.

திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 19 ம் தேதி நடக்கிறது அதிமுக வேட்பாளர் அம்மன் T.நாராயணன் அவர்கள் நேற்று 30.11.2009 காலை 11.40 மணிக்கு வ.உ.சி.திடலில் இருந்து திறந்த வேனில் பேரணியாக புறப்பட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து,பஸ்நிலையம் அருகே உள்ள ஆர் டி.ஒ அலுவலகத்திற்கு சென்றனர் அதிமுக தலைமைக் கழக செயலாளர் திரு.செங்கோட்டையன்,திரு.P.H பாண்டியன்,மாவட்ட செயலாளர் திரு.சண்முக நாதன் முன்னிலையில் 12.15 மணிக்கு உதவி தேர்தல் அலுவலர் பாக்கியம் தேவகிருபை அவர்களிடம் அம்மன் T.நாராயணன் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார்கள் மாற்று வேட்பாளராக முன்னால் ஒன்றிய செயலாளர் பள்ளத்தூர் முருகேசன் மனுதாக்கல் செய்தார்.இதில் மாநில பொருளாளர் திரு.பன்னீர் செல்லம்,முன்னால் அமைச்சர்கள் ஜெயக்குமார்,தளவாய் சுந்தரம்,நத்தம் விஸ்வநாதன்,ராஜ கண்ணப்பன்,பொள்ளாச்சி ஜெயராமன்,நயினார் நாகேந்திரன்,கருப்பசாமி,அன்வர் ராஜா,ஜெனிபர் சந்திரன்,நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா மதிமுக மாநில துணை பொதுசெயலாளர் நாசரேத் துரை,மதிமுக மாவட்ட செயலாளர் ஜோயல்,இந்திய கம்யூனிஸ்ட் மோகன்ராஜ்,M.L.A கள் ராதாகிருஷ்ணன்,சின்னப்பன்,மோகன் மாவட்டM.G.R மன்ற தலைவர் செல்லதுரை,செயலாளர் தாமோதரன்,மற்றும் பொது மக்கள்,கழக உடண்பிறப்புக்கள் திரளாக கலந்துகொண்டனர்.