நெல்லை அதிமுக மாநகர் மாவட்ட,வட்ட நிர்வாகிகள் தேர்தல் 27.11.2009 அன்று காலை துவங்கியது.மானூர் தெற்கு,வடக்கு பகுதிகளுக்கான தேர்தல் புறநகரில் நடந்தது.நெல்லை,பாளை,தச்சை,மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களுக்கான தேர்தல் பாலபாக்யா நகரில் நடந்தது.இத்தேர்தலில் வட்ட செயலாளர்,இனைச்செயலாளர்,அவைத் தலைவர்,2துணைச் செயலாளர்கள்,3 பிரதிநிதிகள்,பொருளாளர் உள்ளிட்ட 9 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதையொட்டி நேற்று போட்டியிடுவோருக்கு விண்ணப்பங்கள் வினியோகிக்கப் பட்டன.வார்டுகளில் போட்டியிடும் அதிமுகனர் ஒரு குழுவாக தங்களுக்கு தேவையான பதவிகளை கேட்டு மனுத்தாக்கல் செய்தனர் தேர்தல் ஏற்பாடுகளை அமைப்பு செயலாளர் திரு.கருப்பசாமி அவர்கள் தலைமையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.மனுத்தாக்கல் நிகழ்ச்சிகளில் மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா,பொருளாளர் மகபூப்ஜான்,துணைச்செயலாளர்கள் தச்சை மாதவன்,காமராஜ்,சந்திரசேகர்,ஹயாத்,அஃப்ரின் பீர்முகமது,அசன் ஜாபர் அலி,அப்துல் அஜிஸ்,மணிமாளிகை கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

.


நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா வெளியிட்டுள்ள அறிக்கை:
கழக நிரந்தர பொதுச்செயலாளர் அம்மா அவர்களின் உத்தரவுப்படி மாநகர் மாவட்ட அமைப்பு தேர்தல் [27.11.2009]துவங்குகிறது.மாநில அமைப்பு செயலாளர் கருப்பசாமி அவர்கள் பொறுப்பில் இத் தேர்தல் வரும் 30ம் தேதி வரை நடைபெறும்.நெல்லை,பாளை,தச்சை,மேலப்பாளையம் பகுதிகளுக்கு பாலபாக்யா நகரில் உள்ள அன்னை மகாலிலும்,மானூர் தெற்கு ஒன்றியத்திற்கு சீதற்பநல்லூர் சமுதாய கூடத்திலும்,மானூர் வடக்கு ஒன்றியத்திற்கு E.S.V மகாலிலும்,நாரணம்மாள்புரம்,சங்கர்நகர் பகுதிகளுக்கு தாழையூத்து பசும்பொன் கல்யாண மண்டபத்திலும் தேர்தல் நடைபெறும்.இத்தேர்தலில் கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் அனைவரும் தங்கள் உறுப்பினர் அட்டையோடு கலந்து கொள்ள வேண்டும் மாநகர் மாவட்ட அளவில் நடக்கும் இத்தேர்தலில் வட்ட நிர்வாகிகள் மற்றும் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


.


ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டுமென வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று ராதாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.இதற்க்கு வள்ளியூர் டி.எஸ்.பி அனுமதி மறுத்து மனுவை நிராகரித்தார்.இதையடுத்து நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் திரு.செந்தூர்பாண்டியன்,மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா ஜெ.பேரவை துணைசெயலாளர் திருவை.சின்னதுரை மற்றும் முன்னால் M.L.Aமாணிக்கராஜ் அவர்கள்,வக்கீல் இன்பதுரை அவர்கள்,V.P.மூர்த்தி,R.S முருகன் அவர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டதிற்கு அனுமதி கேட்டு S.P ஆஸ்ரா கர்க்கை சந்தித்து மனு கொடுக்க வந்தனர்.இது குறித்து செந்தூர் பாண்டியன் அவர்கள் கூறும்போது ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என்று பொதுச்செயலாளர் திரு.ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.அம்மாவின் அனுமதியுடன் தொடர்ந்து நாங்கள் போராடுவோம் என்று அறிவித்தனர்.


.

நெல்லை மாநகர் அதிமுக சார்பில் மைனாரட்டி திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும்,விலைவாசி உயர்வை,கண்டித்தும்,சனிக்கிழமை தோறும் நடைபெறும் தொடர் கண்டன பொதுக்கூட்டம் இன்று 21.11.2009 சனிக்கிழமை அன்று நெல்லை மாநகர் தச்சை பகுதியில் 134 வது தொடர் கண்டன பொதுக்கூட்டத்தில் கழக சிறப்பு பேச்சாளர்கள்
திரு. நெல்லை லெட்சுமணன்,திரு.சி.பா.முருகன் அவர்கள் மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்களும் சிறப்புரையாறினார்கள் கழக முன்னோடிகள்,பொதுமக்கள் ,இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்ந்தவர்கள் ,தொண்டர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.


.



நெல்லை மாநகர் மாவட்ட அ தி மு க சார்பில் 18.11.2009 அன்று காலை கொட்டும் மழையிலும் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள்,திரு.S.முருகேசன் அவர்கள் மாவட்ட அவைத்தலைவர் தலைமையில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சிலைக்கு,அதை தொடர்ந்து நெல்லை அரசு பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள அவரது மணி மண்டபதில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.கழக முன்னோடிகள் பொது மக்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்...........


.



இன்று 17.11.2009 காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இதயதெய்வம் அம்மா அவர்கள் ஆனைக்கினங்க நெல்லை மாநகர் மாவட்ட வார்டு,பகுதி,வட்ட நிர்வாகிகளை தேர்வு செய்ய சம்பந்தமாக கழக M.G.R இளைஞரனி செயலாளர் திரு.K.A.K முகில் அவர்கள் தலைமையில் மற்றும், கழக M.G.R இளைஞரணி துணைச்செயலாளர் திரு.S.சரவணப்பெருமாள்,நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் முன்னிலையில் மற்றும் மாவட்ட துனைச்செயலாளர் திரு.பழனி,மாவட்ட பொருளாளர் திரு மகபூப்ஜான்,இளைஞரனி மாவட்ட செயளாலர் திரு.மணிமாளிகை கணேஷ் மற்றும் கழக அமைப்பினர்.கழக உடன் பிறப்புகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.


.


இதயதெய்வம் அம்மா அவர்கள் ஆனைக்கினங்க நெல்லை மாநகர் மாவட்ட M.G.R இளைஞரணி நிர்வாகிகள் அமைப்பை எற்படுத்த கழக M.G.R இளைஞர் அணி செயலாளர் திரு K.A.K முகில் அவர்கள், மற்றும் கழக M.G.R இளைஞர் அணி துணைசெயலாளர் திரு.S.சரவணப்பெருமாள் அவர்கள் நாளை 17.11.2009 அன்று நெல்லை வருகை தர இருப்பதால் மாவட்ட நிர்வாகிகள்,தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து சிறப்பிக்குமாறு நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் செய்தி வெளியுட்டுள்ளார்கள்.



திருமிகு Dr.S.வெங்கடேஷ் M.D கழக இளைஞர்,இளம் பெண்கள் பாசறை செயலாளர் அவர்களுடன் திரு பாப்புலர் V.முத்தையா மாநகர் மாவட்ட செயலாளர் அவர்கள்.









கழக பொதுச்செயலாளர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க திருநெல்வேலி மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை,இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளின் மாபெரும் ஆலோசனை கூட்டம் மிக விமர்சியாக நடைப்பெற்றது.
தலைமை;திருமிகு Dr.S.வெங்கடேஷ் M.D கழக இளைஞர்,இளம் பெண்கள் பாசறை செயலாளர் அவர்கள்.
முன்னிலை;பாப்புலர் V.முத்தையா மாநகர் மாவட்ட செயலாளர் அவர்கள்.மற்றும் கழக முன்னோடிகள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

.

அனை

த்து இந்திய "அண்ணா" திராவிட முன்னேற்ற கழக
38 வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி நெல்லையில் மாநகர அ.தி.மு.க சார்பில்
முன்னாள் அமைச்சர் திரு.ஜனார்த்தனம் அவர்கள் தலைமையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் (மாநகர் மாவட்ட செயலாளர்)மற்றும் கழக உடன் பிறப்புக்கள் அனைவரும் கலந்து கொன்டனர்.

"கரு 'இருள் ஆளும் தமிழகத்தில்
வெளிச்சத்திற்கு விழாவா?
தயார் படுத்திக்கொள்ளுங்கள் உங்கள்
சுட்டுவிரல் தீக்குச்சியை
அடுத்த தேர்தலில்
அம்மா எனும் வெளிச்சம் விரிக்க..
ஆம்! அன்றுதான் நமக்கு தீப ஒளி நாள்.....

உங்களில் ஒருவன்....
பாப்புலர் V.முத்தையா
மாநகர் மாவட்ட கழக செயலாளர் அவர்கள்




திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மானூர் தெற்க்கு,வடக்கு ஒன்றிய கிளைக்கழக செயலாளர்கள்,ஒன்றிய கவுன்சிலர்கள்,ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் தீபாவளி திருநாள் வாழ்துக்கள் பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு திரு.பாப்புலர் V.முத்தையா மாநகர் மாவட்ட கழக செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நாள்;14.10.2009 இடம்;நெல்லை மாநகர் மாவட்ட கழக அலுவலகம்.நேரம்;மாலை 5 மணி



சங்கணாங் குளம்!..வெம்மை மட்டுமே அப்பியிருக்கும் ஒரு கிராமம்...திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரிக்கு அப்பால் திசையன்விளை நோக்கி பயணிக்கும் வழியில் வெள்ளந்தி மனிதர்களைப் பிரசவிக்கும் இந்த கிராமத்தில்தான் ஓர் ஏழைக் குடும்பத்தின் மூன்றாவது முத்தாக திரு முத்தையா அவர்கள் பிறந்தார்....
அவரது தந்தை திரு M.வள்ளிநாயகம்,தாயார் திருமதி V.லெட்சுமியம்மாள்..
உடன்பிறந்தவர்கள் 2 சகோதாரர்கள்,2 சகோதரிகள்...இவரது குடும்பம் சிறு வயதிலேயே ஏழ்மையின் நிமித்தம் திருநெல்வேலி டவுணுக்கு புலம்பெயர்ந்ததால் இவரது வாழ்க்கை நகர் சார்ந்த சூழலுக்கு மாறியது.....இருப்பினும் தனது ஏழ்மைத் தன்மை மாறாது கிராமத்திற்கேயுரிய தாய்த் தன்மையோடு தன் சக மனிதர்களை அனுகினார்...
தனது பள்ளி வாழ்க்கையை கதீட்ரல் பள்ளியில் தொடங்கியவர் மேல் நிலைக் கல்வி வரை அங்கேயே தொடர்ந்தார்..
சிறு வயதிலேயே அதீத சுறுசுறுப்பும்,துள்ளலும்..மானுட சேவை குறித்த தீவிர முனைப்பும் அவரிடையே நிரம்பியிருந்ததால் நண்பர்களும் நிரம்பியிருந்தனர்...
தனது 13 வது அகவையிலேயே தன் நண்பர்களை இணைத்துக்கொண்டு,வீதிகளில் உண்டியல் ஏந்தி,அதன் மூலம் கிடைத்த நிதியில் பொதுமக்களின் நலனுக்காக பாளையில் ஒரு பேருந்துநிறுத்தத்தை ஏற்படுத்திக் கொடுத்து(ராம்பாப்புலர் பஸ்டாண்ட்) அனைத்து சமூக மக்களையும் ஆச்சரியப்பட செய்தவர்.இதுவே அவர்தம் அரசியல் பொதுவாழ்க்கையில் முதல் மைல்கல்லாக கருதப்படுகிறது....
மாண்புமிகு புரட்சித்தலைவர் MGR மீதிருந்த பக்தியின் நிமித்தம் அவர்தம் வழியில் தம் பயணத்தை தொடங்க 1979 ஆம் ஆண்டு தங்கத் தமிழன் எம்.ஜி.ஆர் மன்றம் தொடங்கி வைத்து அதற்கான அலுவலகமும் ஏற்படுத்திக் கொடுத்தார்....
அதன்பிறகே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார்...
அவர்தம் தீவிர செயல்பாடு,அனைத்து சமூகத்தினரையும் இணைக்கும் பாங்கு,கடின உழைப்பு போன்றவை அவரை இளம் வயதிலேயே பாளையங்கோட்டூர் பகுதி பஞ்சாயத்து தலைவராக பதவியேற்க வைத்தது..
1986 ஆம் ஆண்டு அவர் பஞ்சாயத்து தலைவராகப் பதவியேற்றதிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களைஅறிவித்து ,செயல்படுத்தி மக்களின் ஒருமித்த ஆதரவைப் பெற்றார்..(.Nellai City AIADMK: பாப்புலர் V.முத்தையா அவர்கள் பாளையங்கோட்டூர் ஊராட்சிமன்ற தலைவராக பதவியேற்ற காலத்தில் செய்த சேவைகள்)
அதன் பிறகு பாளை பகுதி இளைஞரணி கழக செயலாளராகவும்,தொடர்ந்து முறையே 15 மற்றும் 16 வது வட்டச் செயலாளராகவும் திறம்பட செயாலாற்றி வெற்றிகண்டார்..
1996 லிருந்து 2007 வரை பாளை பகுதி கழக செயலாளராக சிறப்பாக செயலாற்றினார்...இக் காலத்தில்தான் கழகத்தை சார்ந்த 27 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை மிகப் பிரம்மாண்டமாக நடத்திவைத்தார்.
20/01/2007 முதல் மாண்புமிகு புரட்சித்தலைவி ,கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர் அம்மாவின் ஆணைக்கிணங்க நெல்லை மாநகர மாவட்ட செயலாளராகப் பொறுப்பேற்று பல் வேறு நலத்திட்ட உதவிகளோடு ,கழகத்தினரை அன்பாக ஒருங்கிணைத்து வழிநடத்தி,சிறப்பாக செயல்பட்டு வருகிறார்..மாநகர மாவட்ட செயலாளராக பதவியேற்ற உடனேயே முதல் அறிவிப்பாக மைனாரிட்டி திமுக அரசு கலையும் வரை சனிக் கிழமை தோறும் வாராந்திரப் பொதுக்கூட்டம் நடைபெரும் என அறிவித்து இன்று வரை 125 தொடர் பொதுகூட்டங்களை சிறப்பாக நடத்தி வெற்றிகண்டு வருகிறார்...பொது மக்களிடமும்,கழகத் தொண்டர்களிடமும் சிறப்பான வரவேற்பை பெற்று அவர்களின் குறைகளைக் கேட்டுத், தெரிந்து அதனை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறார்..


.


நெல்லையில்102 வது தேவர் ஜெய்ந்தி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஸ்.முருகேஷசன் அவர்கள் தலமையில் பாப்புலர் V.முத்தையா அவர்கள் முன்னிலையில் மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


நெல்லை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு[02.10.2009]காலை 10.30 மணியளவில் திரு.சரவணப்பெருமாள் அவர்கள்[மாநில இளைஞர் அணி துணை செயலாளர்]தலைமையில் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள்,[நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர்],S.முருகேசன் Ex.M.P அவர்கள் முன்னிலையில் டவுண் சந்திப் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.கழக உடன் பிறப்புகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்





நெல்லையில் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள் பிறந்தநாள் நாள்;02.10.2009
காணொளி