நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா வெளியிட்டுள்ள அறிக்கை:
கழக நிரந்தர பொதுச்செயலாளர் அம்மா அவர்களின் உத்தரவுப்படி மாநகர் மாவட்ட அமைப்பு தேர்தல் [27.11.2009]துவங்குகிறது.மாநில அமைப்பு செயலாளர் கருப்பசாமி அவர்கள் பொறுப்பில் இத் தேர்தல் வரும் 30ம் தேதி வரை நடைபெறும்.நெல்லை,பாளை,தச்சை,மேலப்பாளையம் பகுதிகளுக்கு பாலபாக்யா நகரில் உள்ள அன்னை மகாலிலும்,மானூர் தெற்கு ஒன்றியத்திற்கு சீதற்பநல்லூர் சமுதாய கூடத்திலும்,மானூர் வடக்கு ஒன்றியத்திற்கு E.S.V மகாலிலும்,நாரணம்மாள்புரம்,சங்கர்நகர் பகுதிகளுக்கு தாழையூத்து பசும்பொன் கல்யாண மண்டபத்திலும் தேர்தல் நடைபெறும்.இத்தேர்தலில் கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் அனைவரும் தங்கள் உறுப்பினர் அட்டையோடு கலந்து கொள்ள வேண்டும் மாநகர் மாவட்ட அளவில் நடக்கும் இத்தேர்தலில் வட்ட நிர்வாகிகள் மற்றும் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


.

0 comments:

Post a Comment