சங்கணாங் குளம்!..வெம்மை மட்டுமே அப்பியிருக்கும் ஒரு கிராமம்...திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரிக்கு அப்பால் திசையன்விளை நோக்கி பயணிக்கும் வழியில் வெள்ளந்தி மனிதர்களைப் பிரசவிக்கும் இந்த கிராமத்தில்தான் ஓர் ஏழைக் குடும்பத்தின் மூன்றாவது முத்தாக திரு முத்தையா அவர்கள் பிறந்தார்....
அவரது தந்தை திரு M.வள்ளிநாயகம்,தாயார் திருமதி V.லெட்சுமியம்மாள்..
உடன்பிறந்தவர்கள் 2 சகோதாரர்கள்,2 சகோதரிகள்...இவரது குடும்பம் சிறு வயதிலேயே ஏழ்மையின் நிமித்தம் திருநெல்வேலி டவுணுக்கு புலம்பெயர்ந்ததால் இவரது வாழ்க்கை நகர் சார்ந்த சூழலுக்கு மாறியது.....இருப்பினும் தனது ஏழ்மைத் தன்மை மாறாது கிராமத்திற்கேயுரிய தாய்த் தன்மையோடு தன் சக மனிதர்களை அனுகினார்...
தனது பள்ளி வாழ்க்கையை கதீட்ரல் பள்ளியில் தொடங்கியவர் மேல் நிலைக் கல்வி வரை அங்கேயே தொடர்ந்தார்..
சிறு வயதிலேயே அதீத சுறுசுறுப்பும்,துள்ளலும்..மானுட சேவை குறித்த தீவிர முனைப்பும் அவரிடையே நிரம்பியிருந்ததால் நண்பர்களும் நிரம்பியிருந்தனர்...
தனது 13 வது அகவையிலேயே தன் நண்பர்களை இணைத்துக்கொண்டு,வீதிகளில் உண்டியல் ஏந்தி,அதன் மூலம் கிடைத்த நிதியில் பொதுமக்களின் நலனுக்காக பாளையில் ஒரு பேருந்துநிறுத்தத்தை ஏற்படுத்திக் கொடுத்து(ராம்பாப்புலர் பஸ்டாண்ட்) அனைத்து சமூக மக்களையும் ஆச்சரியப்பட செய்தவர்.இதுவே அவர்தம் அரசியல் பொதுவாழ்க்கையில் முதல் மைல்கல்லாக கருதப்படுகிறது....
மாண்புமிகு புரட்சித்தலைவர் MGR மீதிருந்த பக்தியின் நிமித்தம் அவர்தம் வழியில் தம் பயணத்தை தொடங்க 1979 ஆம் ஆண்டு தங்கத் தமிழன் எம்.ஜி.ஆர் மன்றம் தொடங்கி வைத்து அதற்கான அலுவலகமும் ஏற்படுத்திக் கொடுத்தார்....
அதன்பிறகே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார்...
அவர்தம் தீவிர செயல்பாடு,அனைத்து சமூகத்தினரையும் இணைக்கும் பாங்கு,கடின உழைப்பு போன்றவை அவரை இளம் வயதிலேயே பாளையங்கோட்டூர் பகுதி பஞ்சாயத்து தலைவராக பதவியேற்க வைத்தது..
1986 ஆம் ஆண்டு அவர் பஞ்சாயத்து தலைவராகப் பதவியேற்றதிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களைஅறிவித்து ,செயல்படுத்தி மக்களின் ஒருமித்த ஆதரவைப் பெற்றார்..(.Nellai City AIADMK: பாப்புலர் V.முத்தையா அவர்கள் பாளையங்கோட்டூர் ஊராட்சிமன்ற தலைவராக பதவியேற்ற காலத்தில் செய்த சேவைகள்)
அதன் பிறகு பாளை பகுதி இளைஞரணி கழக செயலாளராகவும்,தொடர்ந்து முறையே 15 மற்றும் 16 வது வட்டச் செயலாளராகவும் திறம்பட செயாலாற்றி வெற்றிகண்டார்..
1996 லிருந்து 2007 வரை பாளை பகுதி கழக செயலாளராக சிறப்பாக செயலாற்றினார்...இக் காலத்தில்தான் கழகத்தை சார்ந்த 27 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை மிகப் பிரம்மாண்டமாக நடத்திவைத்தார்.
20/01/2007 முதல் மாண்புமிகு புரட்சித்தலைவி ,கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர் அம்மாவின் ஆணைக்கிணங்க நெல்லை மாநகர மாவட்ட செயலாளராகப் பொறுப்பேற்று பல் வேறு நலத்திட்ட உதவிகளோடு ,கழகத்தினரை அன்பாக ஒருங்கிணைத்து வழிநடத்தி,சிறப்பாக செயல்பட்டு வருகிறார்..மாநகர மாவட்ட செயலாளராக பதவியேற்ற உடனேயே முதல் அறிவிப்பாக மைனாரிட்டி திமுக அரசு கலையும் வரை சனிக் கிழமை தோறும் வாராந்திரப் பொதுக்கூட்டம் நடைபெரும் என அறிவித்து இன்று வரை 125 தொடர் பொதுகூட்டங்களை சிறப்பாக நடத்தி வெற்றிகண்டு வருகிறார்...பொது மக்களிடமும்,கழகத் தொண்டர்களிடமும் சிறப்பான வரவேற்பை பெற்று அவர்களின் குறைகளைக் கேட்டுத், தெரிந்து அதனை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறார்..
.
5 comments:
"புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழி வந்த எங்கள் வையகமே !
தமிழ்த்தாய் ஈன்று எடுத்த எங்கள் தந்தையே !
தாயகம் திரும்பி பார்க்கும் எங்கள் தவப் புதல்வரே !
வாழும் வல்லலே! கடவுளின் மறு உருவமே !
நெல்லையில் முளைத்த நெற்கதிரே !
முக்கோடி தேவர்களும் போற்றும் முடிச்சூடா மன்னனே !
ஏழைகளின் ஒளி விளக்கே !
இப்படி இவரை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை, இவர் சக்தி "திராவிட முன்னேற்றக் கழகம்" என்னும் சூரியனை கூட எரித்து சாம்பல்லாகி விடும்."
இவர் தான் "எங்களை நல்வழியில் நடத்தும், எங்கள் "உயிர்" எங்கள் "சுவாசம்" எங்கள் "தந்தை" "திரு. பாப்புலர் V.முத்தையா" அவர்கள்"
இன்று போல் என்றும் உங்கள் அரும்பணி தொடர எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்" இப்படிக்கு உங்கள் நலம் விரும்பும்,
"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன் பிறப்புகள்"
" வாழ்க அண்ணா நாமம்! வாழ்க புரட்சித்தலைவர் நாமம்! "
"நாளைய தமிழகம் அம்மாவின் வழியில்"
புரட்சிதலைவர் மற்றும் புரட்சிதலைவி அவர்கள் ஆசியுடன் நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்களே,உங்களின் கழக பணி இதுபோல் என்றென்றும் சிறந்து விளங்கிட,மென்மேலும் உங்கள் செயல் வளர்ந்திட மனதார வேண்டுகிறேன்.உங்களின் கழக பணி என்னை போன்ற அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது.என்றும் அம்மாவின் வழியில் உங்கள் கழக பணிகள்,செயல்கள் சிறக்க வளர வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு கழக குடும்பத்தின் ஒரு சகோதரன்.என்றும் "அம்மா எனும் கடவுளின் உண்மை பக்தன்".
திருப்பூர் நித்தி. D.E.C.E.,B.Tech.
அன்பு தம்பி நித்தி கு அன்பு கலந்த வணக்கங்கள்.உங்கள் ஆதரவுக்கு மிக்க மழிழ்ச்சி.வாழ்க அம்மா வளர்க அம்மாவின் புகழ்.....
I am proud about respected nellai mavatam avargal.such an amazing and good inspiring political personality.thangatharagai amma valzha.
Post a Comment