நெல்லை அதிமுக மாநகர் மாவட்ட,வட்ட நிர்வாகிகள் தேர்தல் 27.11.2009 அன்று காலை துவங்கியது.மானூர் தெற்கு,வடக்கு பகுதிகளுக்கான தேர்தல் புறநகரில் நடந்தது.நெல்லை,பாளை,தச்சை,மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களுக்கான தேர்தல் பாலபாக்யா நகரில் நடந்தது.இத்தேர்தலில் வட்ட செயலாளர்,இனைச்செயலாளர்,அவைத் தலைவர்,2துணைச் செயலாளர்கள்,3 பிரதிநிதிகள்,பொருளாளர் உள்ளிட்ட 9 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதையொட்டி நேற்று போட்டியிடுவோருக்கு விண்ணப்பங்கள் வினியோகிக்கப் பட்டன.வார்டுகளில் போட்டியிடும் அதிமுகனர் ஒரு குழுவாக தங்களுக்கு தேவையான பதவிகளை கேட்டு மனுத்தாக்கல் செய்தனர் தேர்தல் ஏற்பாடுகளை அமைப்பு செயலாளர் திரு.கருப்பசாமி அவர்கள் தலைமையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.மனுத்தாக்கல் நிகழ்ச்சிகளில் மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா,பொருளாளர் மகபூப்ஜான்,துணைச்செயலாளர்கள் தச்சை மாதவன்,காமராஜ்,சந்திரசேகர்,ஹயாத்,அஃப்ரின் பீர்முகமது,அசன் ஜாபர் அலி,அப்துல் அஜிஸ்,மணிமாளிகை கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

.

0 comments:

Post a Comment