ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டுமென வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று ராதாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.இதற்க்கு வள்ளியூர் டி.எஸ்.பி அனுமதி மறுத்து மனுவை நிராகரித்தார்.இதையடுத்து நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் திரு.செந்தூர்பாண்டியன்,மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா ஜெ.பேரவை துணைசெயலாளர் திருவை.சின்னதுரை மற்றும் முன்னால் M.L.Aமாணிக்கராஜ் அவர்கள்,வக்கீல் இன்பதுரை அவர்கள்,V.P.மூர்த்தி,R.S முருகன் அவர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டதிற்கு அனுமதி கேட்டு S.P ஆஸ்ரா கர்க்கை சந்தித்து மனு கொடுக்க வந்தனர்.இது குறித்து செந்தூர் பாண்டியன் அவர்கள் கூறும்போது ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என்று பொதுச்செயலாளர் திரு.ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.அம்மாவின் அனுமதியுடன் தொடர்ந்து நாங்கள் போராடுவோம் என்று அறிவித்தனர்.
.
0 comments:
Post a Comment