திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 19 ம் தேதி நடக்கிறது அதிமுக வேட்பாளர் அம்மன் T.நாராயணன் அவர்கள் நேற்று 30.11.2009 காலை 11.40 மணிக்கு வ.உ.சி.திடலில் இருந்து திறந்த வேனில் பேரணியாக புறப்பட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து,பஸ்நிலையம் அருகே உள்ள ஆர் டி.ஒ அலுவலகத்திற்கு சென்றனர் அதிமுக தலைமைக் கழக செயலாளர் திரு.செங்கோட்டையன்,திரு.P.H பாண்டியன்,மாவட்ட செயலாளர் திரு.சண்முக நாதன் முன்னிலையில் 12.15 மணிக்கு உதவி தேர்தல் அலுவலர் பாக்கியம் தேவகிருபை அவர்களிடம் அம்மன் T.நாராயணன் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார்கள் மாற்று வேட்பாளராக முன்னால் ஒன்றிய செயலாளர் பள்ளத்தூர் முருகேசன் மனுதாக்கல் செய்தார்.இதில் மாநில பொருளாளர் திரு.பன்னீர் செல்லம்,முன்னால் அமைச்சர்கள் ஜெயக்குமார்,தளவாய் சுந்தரம்,நத்தம் விஸ்வநாதன்,ராஜ கண்ணப்பன்,பொள்ளாச்சி ஜெயராமன்,நயினார் நாகேந்திரன்,கருப்பசாமி,அன்வர் ராஜா,ஜெனிபர் சந்திரன்,நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா மதிமுக மாநில துணை பொதுசெயலாளர் நாசரேத் துரை,மதிமுக மாவட்ட செயலாளர் ஜோயல்,இந்திய கம்யூனிஸ்ட் மோகன்ராஜ்,M.L.A கள் ராதாகிருஷ்ணன்,சின்னப்பன்,மோகன் மாவட்டM.G.R மன்ற தலைவர் செல்லதுரை,செயலாளர் தாமோதரன்,மற்றும் பொது மக்கள்,கழக உடண்பிறப்புக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment