
கழகமே கோவில் அம்மாவே தெய்வம் 27.02.2010 அன்று மாலை 7 மணி அளவில் பாளை ஜவகர் திடலில் அதிமுக பொதுக்கூட்டம் பகுதி செயலாளர் காமராஜ் தலைமை வகித்தார் தங்கமணி,அப்ரின் பீர் முகமது,விவேகானந்த பாண்டியன்,அப்துல் வகாப் முன்னிலை வகித்தனர் மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர் பரனி சங்கரலிங்கம் வரவேற்றார்.மாநில M.G.R இளைஞரனி துணை செயலாளர் S சரவணபெருமாள் அவர்கள்,மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V முத்தையா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் தலைவர் முருகேசன்,துணை செயலாளர் பழனி,பொருளாளர் மகபூப்ஜான்,முன்னால் அமைப்பு செயலாளர் முத்துக்கருப்பன்,சட்ட மன்ற தொகுதி செயலாளர் ஆர்.பி ஆதித்தன்,பகுதி செயலாளர்கள் மோகன்,மாதவன்,மாவட்ட MGR செயலாளர் கணேஷ்ராஜா,ஜெ.பேரவை செயலாளர் சுதா பரமசிவன் MGR இளைஞர் அணி செயலாளர் கணேஷ்,பகுதி செயலாளர் ஈஸ்வரகணபதி,பாளை ஒன்றிய செயலாளர் ராமசுப்பிரமணியன்,செல்வகுமார்,பரமசிவம்,சப்பாணிமுத்து மற்றும் தொண்டர்கள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் நாகேந்திரன் நன்றி கூறினார்கள்.
.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் பிறந்தநாளான 24.02.2010 அன்று அதிகாலை 12 மணிக்கு நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V முத்தையா அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.சாலைக்குமார சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு 62 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது.62 பேர் பால்குடம் எடுத்து பாப்புலர் V முத்தையா அவர்கள் தலைமையில் ஊர்வலமாக வந்தனர்.ஏற்பாடுகளை மாவட்ட மகளிர் அணி துணைச்செயலாளர் புவனேஸ்வரி செய்திருந்தார் தொடர்ந்து பாளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு இலவச தொட்டில்,படுக்கை வழங்கப்பட்டன.பிஷப் சார்ஜென்ட் பள்ளியில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.அதை தொடர்ந்து பாளை பகுதியில் ரத்ததான முகாம் ஆர்.பி.ஆதித்தன்,நெல்லை தொகுதி பொருப்பாளர் பள்ளிக்கோட்டை செல்லத்துரை தலைமையில் நடந்தது.பாளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று பிறந்த 15 குழந்தைகளுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்கள் தலைமையில் மாநில M.G.R இளைஞரணி செயலாளர் சரவணபெருமாள் அவர்கள் மோதிரம் வழங்கினார்கள்.
.

மாண்புமிகு அம்மா அவர்களின் 62 வது பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் விதமாக நெல்லை மாநகர் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பகுதி,ஒன்றிய,கழகம் வாரியாக நடைபெற இருக்கிற செயல்வீரர்கள் ஆலோசனை கூட்ட பட்டியலை மாநகர் மாவட்ட செயலாளர் தகவலின் பெயரில் பின் வருமாறு:
06.02.2010 - சனிக்கிழமை மாலை -மேலப்பாளையம் பகுதிக்கழகம் சார்பிலும்
07.02.2010 - ஞாயிறு காலை -மானூர் தெற்கு ஒன்றியக் கழகம் சார்பிலும்
மாலை - தச்சை பகுதிக் கழகம் சார்பிலும்
08.02.2010 - திங்கள்கிழமை காலை -மானூர் வடக்கு ஒன்றியக் கழகம் சார்பிலும்
மாலை - நெல்லை பகுதிக் கழகம் சார்பிலும்
09.02.2010 - செவ்வாய்கிழமை மாலை - பாளை பகுதிக் கழகம் சார்பிலும்
செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும்.இறுதியாக பிப்.14ம் தேதி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் திரளாக வந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.
நன்றி மாநகர் மாவட்ட கழகம்
கழகமே கோவில்... அம்மாவே தெய்வம்
நெல்லை மாவட்ட கழக செயலாளர் திரு.பாப்புலர் V முத்தையா அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் வருகிற பிப்ரவரி 24ம் தேதி மாண்புமிகு அம்மா அவர்களின் 62 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக பகுதி,ஒன்றிய,பேரூராட்சி கழக செயல்வீரர்கள் கூட்டத்தை வருகிற பிப் 10ம் தேதிக்குள் செயல்வீரர்கள் கூட்டத்தை சிறப்பாக கூட்ட ஏற்பாடு செய்திட கேட்டுக் கொண்டுள்ளார்.
.




கழகமே கோவில் அம்மாவே தெய்வம் தலைமை கழக செய்தி:
மாண்புமிகு அம்மா அவர்கள் ஆசியுடன் மீண்டும் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளராக திரு.பாப்புலர் V.முத்தையா அவர்களை தேர்ந்தெடுத்து அறிவித்த மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து மாவட்ட கழக நிர்வாகிகள்,பிற அணி நிர்வாகிகள்,பகுதி செயலாளர்கள்,வட்ட செயலாளர்கள்,தொண்டர்கள் மாவட்ட செயலாளர் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.மேலும் பணிசிறக்க வேண்டி ஆலயங்களில் சிறப்பு பூஜை செய்து சர்க்கரை பொங்கல்,இனிப்பு வழங்கி,பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாடினர்.
.
தச்சநல்லூரில் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நடந்தது மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் ஜெரால்ட் தலைமை வகித்தார்.துணை செயலாளர் பழனி,பொருளாளர் மகபூப்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் அமைப்பு செயலாளர் திரு.P.H பாண்டியன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் சக்திகோதண்டம்,தலைமை பேச்சாளர்கள் காந்திமதி நாதன்,முகவை சண்முகம்,அவை தலைவர் முருகேசன்,MGR மன்ற செயலாளர் கணேசராஜா,MGR இளைஞர் அணி செயலாளர் மணிமாளிகை கணேஷ் பீர்முகமது மற்றும் பொது மக்கள்,கழக தொண்டர்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.
.
மக்கள் மத்தியில்
தன்னுடன் சேர்ந்து உழைத்த ஏர் கலப்பைக்கும்
ஆட்டுக்கும் மாட்டுக்கும் அருவிக்கும்
இருள் விலக வழி தந்த கதிரவனுக்கும்
நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர்
திருநெல்வேலி மாவட்டம்.
.
அதிமுக அமைப்பு கழக தேர்தலில் கடைசி கட்டமாக 10.1.2010 அன்று மாநகர் மாவட்ட கழக அமைபிற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது.
.நன்றி மாவட்ட கழகம்
கழகமே கோவில் அம்மாவே தெய்வம்
வருகிற ஜன 6,7.8.01.2010 ஆகிய மூன்று நாட்களில் இரண்டாம் கட்ட உள்கட்சி அமைப்பு தேர்தல் பகுதி கழகம்,ஒன்றிய,பேரூர் கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் நெல்லை மாநகர் மாவட்ட அ தி மு க அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.உள்கட்சி தேர்தல் உறுப்பினர்களிடையே சூடு பிடித்துள்ளதால் 2 ம் கட்ட தேர்தல் மிகவும் போட்டியுடன் நடைபெறும் என அதிமுகவினரிடையே எதிர்பார்க்கப்படுகிறது.
.
பாளை பகுதி 22 வது வட்ட பிரதிநிதி 1972 ல் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே உறுப்பினராக உள்ள அடையப்பா அருணாச்சலம் அவர்கள் என்பவர் நடைப்பெற்ற அதிமுக அமைப்பு தேர்தலில் 22 வது வட்ட கழக பிரதிநிதியாக போட்டியிட்டார். தற்ப்போது அறிவிக்கப்பட்ட பட்டியலில் தனது பெயர் நிக்கப்பட்டுயிருப்பதை கண்டு மன வேதனை அடைந்து தனது பெயர் நிக்கப்பட்டதுக்கு தேர்தல் பொருப்பாளர் கருப்பசாமி MLA தான் காரணம் என்றும் அதற்க்கு பிரதிபலனாக ரூபாயை பெற்று கொண்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த அடையப்பா அருணாச்சலம் இன்று 03.01.2010 முற்பகல் 12 மணியளவில் பாளை மார்க்கெட் திடல் முன்பு தன் கையில் வைத்திருந்த 5 லிட்டர் மண்ணென்னை கேன்னை தன் தலையில் உற்றி கருப்பசாமி MLA வை கண்டித்து கோஷம் விட்டவாரே தீக்குளிக்க முற்ப்பட்டார் அருகில் இருந்த புற காவல் நிலையதில் இருந்த காவலர்கள் ஓடி வந்து தடுத்தனர் .அவரை கைது செய்து விசாரனை செய்து வருகிறார்கள்.இச் சம்பவம் நெல்லை அதிமுக வினரிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
.
இதய தெய்வம் அம்மா அவர்கள் ஆணைக்கினங்க நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் இன்று 26.12.2009 இரவு 7 மணியளவில் 139 வது தொடர் சனிக்கிழமை பொதுக்கூட்டம் மானூரில் கழக சிறப்பு பேச்சாளர் திரு.தீப்பொறி ஆறுமுகம் மற்றும் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.பொது மக்கள்,கழக தோழர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.


இன்று 26.12.2009 காலை பாளை பகுதியில் சாலையில் திரியும் மாடுகளை போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து பவுண்டியில் அடைத்து வருகின்றனர்.இதற்கு எதிர்பு தெரிவித்து தெற்கு பஜாரை சேர்ந்த மாட்டு உரிமையாளர்கள்,யாதவர் மகாசபை நெல்லை மாவட்ட தலைவர் திரு.குற்றால முருகன்,நெல்லை மாவட்ட மாநகர் செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் மற்றும் தொண்டர்கள் போலீஸ்சாரின் அத்துமீறலை கண்டித்து சாலை மறியலில் ஈடுப்பட்டு மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து பேச்சு நடத்த வேண்டும் என வலியுருத்தி தொடர்ந்து சாலை ஓரம் அமர்ந்து தர்ணாவில் ஈடு பட்டனர்.நெல்லை அதிமுக வினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
.
முன்னாள் முதல்வர் M.G.R அவர்களின் 22வது நினைவு நாளயொட்டி நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கொக்கிரகுளதில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட செயலாளர் திரு பாப்புலர் V.முத்தையா தலைமையில் அதிமுக வினர் மாலை அணிவித்தனர்.மாவட்ட அவைத் தலைவர் திரு.முருகேசன்,துணை செயலாளர் பழனி அவர்கள்,பொருளாளர் திரு.மகபூப்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கழக தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
.


.jpg)
.jpg)
