பாளை ஜவகர் மைதானத்தில் 23.04.2010 அன்று இரவு 7 மணிக்கு பாளை பகுதி செயலாளர் காமராஜ் தலைமை வகித்தார்.மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம்,மாநில சட்டத்துறை துணை செயலாளர் அரசு அமல்ராஜ் சிபிஜ[M]மாவட்ட செயலாளர் பழனி,சிபிஜ மாவட்ட செயலாளர் சண்முகவேல்,சிபிஜ[M]மாநகர செயலாளர் தியாகராஜன்,பார்வர்டுபிளாக் மாவட்ட பொது செயலாளர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கணேசராஜா,பரணி சங்கரலிங்கம்,ஆகியோர் வரவேற்றனர்.இலக்கிய அணி துணை செயலாளர் சக்திகோதாண்டம்,மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்கள் ஏப்.27 ம் தேதி நடைபெறும் கடையடைப்பு போராட்ட விளக்க மாக உரையாற்றினார்.மாவட்ட துணை செயலாளர் பழனி,பொருளாளர் மகபூப்ஜான்,பகுதி செயலாளர் மாதவன்,பிற அணி செயலாளர்கள் சுதாபரமசிவன்,ஜெரால்ட்,வி.டி திருமலையப்பன்,பொதுக்குழு உறுப்பினர் விஜிலா,செந்தில் ஆறுமுகம் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆயிரம் செல்வகுமார்,பாளை பகுதி துணை செயலாளர் அப்ரின் பீர்முகமது,வட்ட செயலாளர் அசன் ஜாபர் அலி,சப்பாணிமுத்து டால் சரவனன் உட்பட கழக நிவாகிகள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் கண்மணி நன்றி கூறினார்.
.
அம்மா அவர்களின் ஆணைக்கினங்க நெல்லை டவுனில் அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு நெல்லை டவுன் குற்றாலம் ரோட்டில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது மாநகர் மாவட்ட பொருளாளர் மகபூப்ஜான் தலைமை வகித்தார்.மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் மணிமாளிகை கணேஷ்,வட்ட பாக செயலாளர் சாத்தை நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அண்ணா நகை தொழிலாளர் சங்க செயலாளர் அய்யப்பன் வரவேற்றார்.மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார் இதில் பகுதி செயலாளர் மோகன்,பொதுக்குழு உறுப்பினர் சங்கர்,வக்கீல் மணிகண்டன்,வட்ட செயலாளர்கள் அப்துல் சமது,வரதராஜன்,அண்ணா தொழிற்சங்க தலைவர் உமர்,பொருளாளர் சுப்பிரமணியன்,இலக்கிய அணி செயலாளர் நவ்ஷாத்,மாநில பேச்சாளர்கள் கபாலி,காந்திமதிநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
.
நெல்லை டவுனில் அதிமுக பொதுக்கூட்டம் பகுதி செயலாளர் மோகன் தலைமையில் 22.04.2010 அன்று இரவு நடைப்பெற்றது.மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம்,மார்க்சியூஸ்ட் மாவட்ட செயலாளர் பழனி,இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில ஜெ பேரவை செயலாளர் திரு.நயினார் நாகேந்திரன் சிறப்புரை ஆற்றினார்கள்.தலைமை பேச்சாளர் கிருபாகரன்,மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா ,மாவட்ட அவைத்தலைவர் திரு.முருகேசன்,மாவட்ட நிர்வாகிகள் பழனி,மகபூப்ஜான்,பகுதி செயலாளர்கள் சுதாபரமசிவன்,ஜெரால்ட்,பரணி ச்ங்கரலிங்கம்,மாவட்ட ஜெ பேரவை இனை செயலாளர் செந்தில் ஆறுமுகம்,பாளை பகுதி ஜெ பேரவை செயலாளர் எம்.சி.ராஜன்,பாளை பகுதி துணை செயலாளர் அப்ரின் பீர்முகமது,வட்ட செயலாளர் ஜாபர் அலி,பிரகாஷ்,சரவனன்,செல்லதுரை,உட்பட பலர் கலந்து கொண்டனர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.
.
நெல்லையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டதில் திமுக - அதிமுகவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.இதையடுத்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.நெல்லை மாநகரை அழகுபடுத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் வண்ணார்பேட்டையில் [20.04.2010 ]நேற்று நடந்தது மாநகர் துணை போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் தலைமை வகித்தார்.நெல்லை ஆர்.டி.ஒ தமிழ்செல்வி,உதவி போலீஸ் கமிஷனர்கள் மகேந்திரன்,ராமச்சந்திரன்,மாநகராட்சி பாளை மண்டல உதவி கமிஷனர் பாஸ்கர் மற்றும் திமுக செயலாளர்கள் உலகநாதன்,சாகுல் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா,மேலப்பாளையம் பகுதி செயலாளர் ஹயாத் மற்றும் அணைத்துக்கட்சியினர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் அவினாஷ்குமார் பேசுகையில் நெல்லை மாநகரை அழகு படுத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக விளப்பரபோர்டுகள் வைக்க கூடாது போலீஸ் அனுமதியின்றி விளப்பரங்கள்,போஸ்டர்கள் ஒட்டக்கூடாது இதற்க்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.அப்போது மாவட்ட அதிமுக செயலாளர் பாப்புலர் V.முத்தையா தண்ணீர் பந்தல் வைப்பதற்க்கு கூட எதிர்க்கட்சியினருக்கு அனுமதி மறுக்கப் படுகிறது என்றார் மேலப்பாளையம் பகுதி திமுக செயலாளர் சாகுல் ஹமீது ஆளும் கட்சியினரும் முன் அனுமதி பெற்றுதான் விளம்பரம் போர்டுகள்,தண்ணீர் பந்தல்கள் அமைக்கின்றனர் என்றார்.இதற்கு அதிமுகவினர் அனுமதி பெற்றதை நிரூபிக்க முடியுமா?என்று கேட்டனர்.இது தொடர்பாக திமுக-அதிமுகவினரிடையெ கடும் வாக்குவாதம் ஏற்ப்பட்டது போலீசார் அவர்களை சமாதானப் படுத்தினர்.மேலும் போஸ்டர்கள்,பேனர்கள் வைக்க கூடாது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது இதற்கென கலெக்டர் தலைமையில் போக்குவரத்து கமிட்டி இருக்கிறது அந்த கமிட்டி தான் முடிவு செய்ய வேண்டும் என அனைத்துக் கட்சியினரும் கருத்து தெரிவித்தனர் எனவே முடிவு எதுவும் எடுக்கப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.வரும் 30ம் தேதி மீண்டும் இந்தக் கூட்டம் நடைபெறும் என துணை போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் தெரிவித்தார்.
.
பாளை 23வது வார்டில் அம்மா அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக கொடியேற்று விழா மற்றும் அம்மா அவர்கள் ஆணைப்படி தண்ணீர் பந்தல் திறப்புவிழா 19.04.2010 அன்று நடந்தது.வார்டு அவைத்தலைவர் ஆனந்தநம்பி தலைமை வகுத்தார் மாநகர் மாவட்ட பேரவை இணை செயலாளர் செந்தில் ஆறுமுகம் முன்னாள் கவுன்சிலர் கருடன் ராஜகோபால்,பகுதி பேரவை செயலாளர் ராஜன்,பாளை சட்ட மன்ற செயலாளர் ஆதித்தன்,மாவட்ட துணை செயலாளர் பழனி முன்னிலை வகித்தனர்.பகுதி துணை செயலாளர் அப்ரின் பீர்முகமது வரவேற்றார்.மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்கள் கோடைக்காலத்தை முன்னிட்டு கட்சி சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்கள்.முன்னாள் மாவட்ட மன்ற செயலாளர் சங்கரன்,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் வக்கீல் சிவா 14வது வட்ட செயலாளர் சப்பாணி முத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் மாரிமுத்து நன்றி கூறினார்.ஏற்பாடுகளை வார்டு வட்ட செயலாளர் மைதின் கம்பர்,இணை செயலாளர் பொன்ராஜ்,பொருளாளர் சந்திரசேகர்,மேலமைப்பு பிரதிநிதிகள் கணேசன்,பாரதி,முத்துகுமார் செய்திருந்தனர்.
.
ஜெயலலிதா அவர்கள் பிறந்தநாளையொட்டி நெல்லை உடையார்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது.மாநகர் மாவட்ட துணை செயலாளர் பழனி தலைமை வகித்தார் வட்ட செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார்.மாநகர் மாவட்ட செயலாலர் திரு.பாப்புலர் V முத்தையா,பொருளாளர் மகபூப்ஜான்,எம்ஜிஆர் மன்ற செயலாளர் தச்சை கணேஷ் ராஜா,பகுதி தலைவர் பொன்னுத்துரை,பொதுக்குழு உறுப்பினர்கள் சங்கர்,விஜிலா சத்யானந்த்,ஈஸ்வரகணபதி,இளைஞர் பாசறை செயலாளர் பரமசிவன்@சிவா,மணிகண்டன்,சின்னதுரை மற்றும் சந்திரசேகர்,ரவி ஆறுமுகம்,கண்டியபேரி முத்து,பழனி,சங்கர்,மாரி,வெள்ளப்பாண்டியன்,வேலு,வேல்முருகன்,பொன் தங்கராஜ்,ஈஸ்வரன்,முருகன்,பால்ராஜ்,சுப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர் இசக்கிமுத்து நன்றி கூறினார் கூட்டத்தில் நல உதவிகள் வழங்கப்பட்டன.
.
.
நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஊராட்சி மற்றும் வட்ட பாக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு கோடகநல்லூர் செல்லப்பா என்ற பெருமாள் தலைமை வகித்தார் மாநகர் மாவட்ட பொருளாளர் மகபூப்ஜான்,மானூர் தெற்கு ஒன்றிய செயளாளர் வேலாயுதம்,வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனரதில் மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்கள் ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்,மற்றும் இலக்கிய அணி செயலாளர் நவ்ஷாத்,இளைஞர் பாசறை செயலாளர் பரமசிவன் என்ற சிவா ,மூக்காண்டி,வக்கீல் மணிகண்டன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
.